மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு இன்று காலை கூடுதலான பனிப்பொழிவு!

0
259

மட்டக்களப்பு மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு இன்று காலை கூடுதலான பனிப்பொழிவு, இதனால் மட்டு மாவட்டம் எங்கும் மலையகம் போன்று காட்சியளித்துள்ளது.
பிரதேசம் எங்கும் பனிக்கூட்டம் காணப்பட்டதனால் ஒருவரை ஒருவர் அடையாளம் காணமுடியாத வகையில் இருண்ட ஒரு பிரதேசமாக காட்சியளித்துள்ளது. இது மலைநாட்டில் நிலவும் காலநிலைக்கு ஒத்ததாக உள்ளது வரலாற்றில் இவ்வாறானதோர் பனிப்பொழிவை சத்திக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பனியுடன்கூடிய காலநிலையானது காலை 8 மணிவரை நீடித்திருந்துள்ளது. இதன் காரணத்தால் மாணவர்கள், அரச ஊழியர்கள், விவசாயிகள், கூலிதொழிலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பினரும் பலத்த சிரமத்தை எதிர்நோக்கியிருந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here