முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான விமல் வீரவன்ச நேற்று சி. ஐ. டி யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. தனது சட்டத்தரணியுடன் சி. ஐ. டி. க்கு வருகை தந்த விமல் வீரவன்ச சி. ஐ. டி முன் வாக்குமூலம் அறிவித்துள்ளார்.
கடுவெல பிரதேச சபை தலைவர் புத்ததாசவின் முறைப்பாட்டின் பிரகாரமே விமல் வீரவன்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். 2011 ஜுலை 17 ஆம் திகதி சட்டவிரோதமாக சென்ற ஊர்வலத்தில் விமல் வீரவன்ச கலந்துகொண்டதாக முறையிடப்பட்டிருந்தது.
சி. ஐ. டி விசாரணையின் பின் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச எம்.பி அரசியல் நோக்கிலே இவ்வாறு விசாரணை நடத்துவதாகவும் இதன்மூலம் தனது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது என்றும் கூறினார். நுகேகொட கூட்டத்தையடுத்தே இவ்வாறு தன்மீதும் மனைவி மீதும் கெடுபிடி இடம்பெறுகிறது. மனைவி மீதான போலி கடவுச்சீட்டுக் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் குறிப் பிட்டார்.