சித்திரவதைக் குற்றச்சாட்டுக்களால் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சிறீலங்கா!  

0
466

இது தொடர்­பாக ஏபி செய்தி நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­ தா­வது,

‘கடந்த புதன்­கி­ழமை, அசோ­சி­யேட்­டட் பிரஸ் வெளி­யிட்­டுள்ள புதிய குற்­றச்­சாட்­டு­கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும் என்று மருத்­து­வர்­கள், உள­வி­யல் நிபு­ணர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், மனித உரிமை அமைப்­பு­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

அமெ­ரிக்கச் செனட்­டின் சன­நா­யகக் கட்சி உறுப்­பி­ன­ரும், வெளி­நா­டு­க­ளுக்­கான அமெ­ரிக்க உத­வி­கள் குறித்த உப­கு­ழு­வில் இடம்­பெற்­றி­ருப்­ப­வ­ரு­மான, பற்­றிக் லெஹி, கைது­கள் தடுப்­பு­கள் பன்­னாட்­டுத் தர­நி­ய­மங்­க­ளுக்கு ஏற்­பவே இடம்­பெற வேண்­டும். போர்க் குற்­றங்­க­ளுக்­குப் பொறுப்­புக்­கூ­றப்­பட வேண்­டும் என்ற நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே, அமெ­ரிக்கச் செனட் ஒதுக்­கீட்­டுக் குழு இலங்­கைக்கு உத­வி­களை வழங்­கி­யுள்­ளது.

2015ஆம் ஆண்­டில் இருந்து 76 மில்­லி­யன் டொலரை அமெ­ரிக்­கா­வின் அய­லு­ற­வுத்­துறை உத­வி­யா­கப் பெற்­றுள்­ளது. இந்­தச் சித்­தி­ர­வ­தை­கள் கொடூ­ர­மா­னவை என்­ப­து­டன், நல்­லி­ணக்­கம் மற்­றும் நீதிக்­கான இலங்கை அர­சின் வாக்­கு­று­தி­க­ளுக்கு முர­ணா­னது. இதற்­குப் பொறுப்­பா­ன­வர்­க­ளைத் தண்­டிப்­ப­தற்­காக, சித்­தி­ர­வ­தை ­க­ளுக்­கான நம்­ப­க­மான ஆதா­ரங்­களை தேடிக் கொண்­டி­ருக்­கி­றேன், என்று தெரி­வித்­துள்­ளார்.

அதே­வேளை, இந்­தச் சித்­தி­ர­ வ­தை­கள் தொடர்­பாக சுதந்­தி­ர­ மான விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட வேண்­டும் என்று மருத்­து­வர்­கள் பலர், ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளர் சயிட் அல் ஹூசை­னி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

‘தட­ய­வி­யல் நிபு­ணர்­கள் என்ற வகை­யில் நாங்­கள், இலங்­கை­யில் சித்­தி­ர­வ­தை­கள் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, நாட்டை விட்டு வெளி­யே­றிய நூற்­றுக்­க­ணக்­கான இலங்­கை­யர்­களை பார்த்­தி­ருக்­கி­றோம். ஆட்சி மாற்­றத்­துக்­குப் பின்­ன­ரும், இலங்­கை­யில் இருந்து கவலை தரும் எண்­ணிக்­கை­யில் இத்­த­கைய வழக்­கு­கள் தொடர்ந்து வந்து கொண்­டி­ருக்­கின்­றன’ என்று ஐ.நா மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு மருத்­து­வர்­கள் தரப்­பில் எழு­தப்­பட்ட கடி­தத்­தில் குறிப்பிடப் ­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வின் நாடா­ளு­மன்ற அய­லு­ற­வுக் குழு­வில் இடம்­பெற்­றுள்ள சன­நா­யகக் கட்­சி­யின் உயர்­மட்டப் பிர­தி­நி­தி­கள் சபை உறுப்­பி­ன­ரான, எலி­யட் ஏஞ்­சல், வொசிங்­ட­னில் உள்ள கொள்கை வகுப்­பா­ளர்­கள் இந்தச் சித்­தி­ர­வதை அறிக்­கை­களை உதா­சீ­னப்­ப­டுத்த முடி­யாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த அறிக்­கை­க­ளின் தீவி­ரத்­தன்­மை­யைக் கருத்­திற் கொண்டு, இது தொடர்­பாக முழு­மை­யாக பொறுப்­புக்­கூ­றல் நடைபெறும் வரை, இலங்­கை­யு­ட­னான அமெ­ரிக்­கா­வின் மேல­திக இரா­ணுவ உற­வு­கள் விட­யத்­தில் அமெ­ரிக்கா கவ­ன­மாக இருக்க வேண்­டும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக ஜெனி­வா­வில் உள்ள இலங்­கைத் தூத­ர­கத்­துக்குத் திரும்­பத் திரும்ப அழைப்பை ஏற்­ப­டுத்­திய போதும், பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்லை. வெள்­ளிக்­கி­ழமை அனுப்­பப்­பட்ட மின்­னஞ்­ச­லுக்­கும் பதில் இல்லை, என்­றும் ஏபி செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here