அச்சுவேலி மேற்கு கைத்தொழில் பேட்டை வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று முன்தினம் இரவு துணிகர திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த திருட்டு சம்பவத்தை அடுத்து அச்சுவேலி பகுதியில் அமைந்துள்ள இரு வீடுகளில் திருட்டு முயற்சியும் நடைபெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் முன் கதவினை உடை த்து உள்ளே சென்றதிருடர்கள் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 50 பவுண் நகைகள் மற்றும் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் என்பவற்றை திருடர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக கூறப்படுகிறது. நேற்று இரவு பெய்த கன மழையினை சாதகமாக பயன்படுத்திய திருடர்கள் வீடு புகுந்து இத் திருட்டினை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டில் இருந்தவர்கள் மழைக்குளிருக்கு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளனர். இந் நிலையிலேயே இத் திருட்டு இடம்பெற்றுள்ளது. திருட்டு போன நகையின் பெறுமதி 20 இலட்சம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது.
எனினும் காலை எழுந்து பார்த்த போதே வீட்டு அறையில் இருந்த பொருட்கள் அனைத் தும் சிதறுண்டு இருந்துள்ளது. அத்துடன் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நகைகளை தேடிப் பார்த்த போது இரவு திருடர்கள் புகுந்தமை தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.