வடக்கில் தொடரும் கன மழையால் 2 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 141 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4 வீடுகள் முழுமையாகவும், 159 வீடுகள் பகுதி அளவிலும் சேத மடைந்துள்ளன.
இவ்வாறு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது-:மழை தொடருமாக இருந்தால் தாழ் நிலப் பகுதி மக்கள் இன்னும் இடம்பெயர வேண்டிய நிலமை ஏற்படும் எனவும் எச்சரித்தார் .
உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 385 பேரும், ஊர்காவற்றுறைப் பிரதேச செயலர் பிரிவில் 40 குடும்பங்களைச் சேர்ந்த137 பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 8 குடும்பங் களைச் சேர்ந்த 27 பேரும், யாழ்ப் பாணம் பிரதேச செயலர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேரு ம், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 146 குடும்பங்களைச் சேர்ந்த 552 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 893 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் .
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் 273 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 66 பேரும், சண்டி லிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 128 குடும்பங்களைச் சேர்ந்த 444 பேரும், தெல்லிப்பழை பிர தேச செயலர் பிரிவில் 393 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 253 பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 189 குடும்பங்களைச் சேர்ந்த 759 பேரும், பருத்தித்துறைப் பிரதேச செயலர் பிரிவில் 283 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 45 பேரும், மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் 643 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 382 பேரும் பாதிக்கப்பட்டுள்ளளனர் என்றார் யாழ்ப்பாண மாவட்டச் செயலர் நா.வேதநாயகன் .