சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு தான் தமிழ் மக்களுக்கு போதுமான உரித்துக்களை தர முடியும். ஒற்றையாட்சியின் கீழ் என்னதான் தந்தாலும், அதன் கீழ் பெரும் பான்மை மக்களுடைய அதிகாரமே மேலோங்கி நிற்கும், அந்த அதிகாரத்தின் மூலமாக எமக்கு தருவதையும் திருப்பி எடுக்கப்பட கூடிய பழைய நிலை ஏற்படும், எனினும் குறி த்த அதிகாரங்கள் திருப்பி எடுக்கப்பட மாட்டாது என சிலர் கூறுகின்றார்கள். ஆனால் மேலதிகாரம் யார் கைவசம் இருக்கின்றதோ அவர்களால் தான் எதனையும் செய்ய முடி யும். இவ்வாறு வடக்கு மாகாண முதலமை ச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக் னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பதினெட்டு வருடங்களாக வடக்கு கிழக்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணைத்து வைத்திருந்தார்கள். ஆனால் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து உச்ச நீதிமன்றம் வடக்கையும் கிழக்கையும் பிரித்து விட்டது. இவ்வாறு ஒற்றையாட்சியின் கீழ் தருவதை சட்டப்படி திருப்பி எடுத்துவிட முடி யும் என தனது கருத்துக்கு மேற்கோள் ஒன் றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சருடைய அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் சந்தித்து இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்ட போதே அவர் மேற்கண்ட வாறு தெரிவித்துள்ளார்.
அரசு தங்களால் என்ன தர முடியுமோ அதனை தான் தரவுள்ளார்கள். எங்களை பொறுத்தவரையில் இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதே. பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றால், பிரச்சினைக்கான காரணம் அறியப்பட்டு அதற்கேற்ப தீர்வை முன்வைக்கப்பட வேண்டும். வெறுமனே இவ்வளவு தான் தரலாம் என்று கூறி கொண்டு இருந்தால், பிரச்சினைக்கு தீர்வாக அமையாது. அரசு தற்போது தமிழ் மக்களுக்கு தருவதாக கூறுவது காணவே காணாது. ஆனால் அரசு தற்போது தருவதாக கூறுவதை தரட்டும், அது அவர்களின் கடப்பாடு, ஆனால் எங்களை பொறுத்தவரையில் எங்கள் பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கான தீர்வு என்ன என்பது தொடர்பில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம்.
சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு தான் எங்களுக்கு போதுமான உரித்துக்களை தரமுடியும் என்பது எமது அவதானம், ஒற்றையாட்சியின் கீழ் என்னதான் தந்தாலும், அந்த ஒற்றையாட்சியின் கீழ் பெரும்பான்மை மக்களுடைய அதிகாரம் மேலோங்கி நிற் கும், அந்த அதிகாரத்தின் மூலமாக தருவதையும் திருப்பி எடுக்கப்பட கூடிய நிலை ஏற்படும், எனினும் குறித்த அதிகாரங்கள் திருப்பி எடுக்கப்பட மாட்டாது என சிலர் கூறுகின்றார்கள். ஆனால் மேலதிகாரம் யார் கைவசம் இருக்கின்றதோ அவர்களால் தான் எதனையும் செய்ய முடியும்.
நாட்டை பிரிக்க வேண்டும் என்று நாம் எப்போதும் கேட்கவில்லை. சமஷ்டியை கொண்ட நாடுகள் பிரிவினையை கோரவில்லை. அண்மையில் கனடாவில் பிரெஞ்சு மொழி பேசும் கியூபெக் கனடாவிலிரு ந்து பிரிய தேவையில்லை. எங்களுக்கு பிரிவதற்கு பிரியம் இல்லை என்று கூறியு ள்ளனர். இதேபோன்று தான் ஸ்கொட்லாந்தும் கூறியுள்ளது. ஆகவே எங்களுக்கு தர வேண்டியவற்றை தந்தால் நாங்கள் பிரிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவற்றை வைத்து கொண்டு இடைக்கால அறி க்கையை பார்க்க வேண்டும். இந்த விதத்தில் இடைக்கால அறிக்கை பல குறைபாடுகளை கொண்டுள்ளது. ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியை தான் குறிக்கின்றது என முதலமைச்சர் மீளவும் தெரிவித்தார்.
Home
ஈழச்செய்திகள் சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு தான் எங்களுக்கு போதுமான உரித்துக்களை தரமுடியும் !