போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தாக்கிச் சித்திரவதை செய்யப் படுவதும், வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதும் தொடர்வதாக, அசோசியேட்டட் பிரஸ் (ஏ.பி.) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள 50 க்கும் அதிகமான இலங்கைத் தமிழ் ஆண்கள் தாம் தற்போதைய அரசின் காலத்தில் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பான விவரங்களை அசோசியேட்டட் பிரசிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
அவர்களின் மார்பு, இடுப்பு, கால்களில் வடுக்கள் காணப்பட்டன. அசோசியேட்டட் பிரஸ், 32பேரை மருத்துவ மற்றும் உளவியல் மதிப்பீடுகளை ஆய்வு செய்ததுடன், 20 பேரை நேர் காணல் செய்தது.உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த தரப்பில் ஒரு போராளிக் குழுவை மீண்டும் உருவாக்க முயற்சிப்பதாக தம்மீது குற்றஞ்சாட்டப்பட்ட தாக அவர்கள் கூறினர்.
8 ஆண்டுகளுக்கு முன் போர் முடிவுக்கு வந்த போதிலும், 2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து இந்த ஆண்டின் ஜூலை வரை சித்திரவதை களும் மீறல்களும் இடம்பெற்றுள்ளன. இலங்கை அதிகாரிகள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.
கடந்த 40 ஆண்டுகளாக உலகில் மோசமான நாடுகளில் சித்திரவதைகளில் இருந்து தப்பி
வந்த வர்களை நேர்காணல் செய்த பியர்ஸ் பிகோ என்ற தென்னாபிரிக்க மனித உரிமைகள் விசாரணையாளர், தாம் இதற்கு முன்னர் கேள்விப்பட்டிராத மிருகத்தனமான சித்திரவதைகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்
Home
உலகச்செய்திகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னரும், தமிழர்கள் தாக்கிச் சித்திரவதை செய்யப் படுவது தொடர்கிறது !