காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

0
571

poraattam 1
காணாமற் போனவர்களை மீட்டுத் தரக்கோரி சனிக்கிழமை  காலை 10 மணிமுதல் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக   கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.

யாழ்.பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய உறவுகள்   காணாமற்போக தமிழர் ஜடப்பொருளா?உலகே உனக்கு கண்ணில்லையா?போன்ற பதாதைகளை ஏந்தியவாறு கண்ணீர் மல்க தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர்.porattam 2

மேலும் இந்தப் போராட்டத்தில் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன்,  தமிழ்த்தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் காணாமற் போன உறவுகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here