ஜெனிவாவில் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்!

0
297


ஐக்கிய மனித உரிமைகள் பேரவையின் 28 ஆவது அனைத்துலக மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடர் நாளை (6) ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளது.
இலங்கை தொடர்பான மீளாய்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது. மேலும் 17 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை தொடர்பான மீளாய்வு அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
போரின் பின்னரான நிலைமைகளில் மனித உரிமைகள் பேரவை பல்வேறு பரிந்துரைகளை இலங்கை தொடர்பில் முன் வைத்துள்ளது. இவற்றுள் பல தீர்மானங்களும் உள்ளடங்குகின்றன. மனித உரிமைகளை பாதுகாத்தலை மையப்படுத்தியும் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புகூறல் மற்றும் மீள் நிகழாமையை மையப்படுத்தி மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் பல வலியுறுத்தல்களையும் முன் வைத்துள்ளன.
இதற்கு அமைவாக ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து பல துறைகளை சார்ந்த சிறப்பு நிபுணர்கள் கடந்த காலங்களில் இலங்கைக்கு விஜயம் செயதிருந்தனர். இறுதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீள நிகழாமையை உத்தரவாதப்படுத்தலுக்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரெய்ப் 14 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்ந்திருந்தார்.
பொறுப்புக்கூறல் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ பரிந்துரைக்கப்படலாம். போருடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து நம்பகமான பொறுப்புக்கூறல் இடம்பெறுவதை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும். நிலைமாறுகால நீதி செயற்பாடுகள் அரசியல்மயப்படுத்தப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. எனவே விரிவான நிலைமாறுகால நீதி திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில் காணப்படும் தாமதம் பலரின் கேள்விகளுக்கு காரணமாகியுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு பல தரப்புகள் மற்றும் சிறப்பு நிபுணர்களின் வெளிப்படுத்தல்கள் மற்றும் கடந்த மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் நாடுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விடயங்களின் ஊடாக மீளாய்வுகள் இடம்பெறவுள்ளன. அந்த வகையில் இலங்கையின் விவகாரங்கள் 15 ஆம் திகதி மீளாய்விற்கு எடுத்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here