பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாமை, வடக்கு – கிழக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதில் காணப்படும் தாமதங்கள் போன்றவை உட்பட மனித உரிமை விவகாரங்களில் சிறீலங்கா அரசாங்கத்தின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் இல்லையயன ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரும், தெற் காசிய பிராந்திய விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவரு மான ஜீன் லம்பேட் அம்மையார் தலைமையில், இலங்கைக்கான பயணத்தை மேற்கொண்டி ருந்த குழுவினர் வியாழக்கிழமை (02.11.2017) நடத்திய ஊடக சந்திப்பில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.
அங்கு உரையாற்றிய ஜீன் லம்பேட் அம்மையார், நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்னர் இங்கு விஜயத்தை மேற்கொண்டிருந்தோம். அதன் போது பிரதமர் உட்பட பல உயர்மட்ட தலை வர்களினால் பயங்கரவாத தடைச் சட்டம் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளும் வகை யில் மாற்றப்படும் என்ற உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் அது தொடர்பில் இன்னமும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படாமல் இருப்பது கவலையளிக்கிறது. இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இன்னும் பலர் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோன்று மக்க ளின் காணிகளை விடுவிப்பதிலும், திருப்தி யளிக்கும் வகையில் வேகம் காட்டப்படாமலிருப்பது வேதனையளிக்கிறது.
புதிய அரசி யலமைப்பு உருவாக்கும் முயற்சிகளை உற் சாகமாக மேற்கொண்டு அதன் ஊடாக ஜன நாயகத்தையும், நல்லிணக்கத்தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளை சிறீலங்கா அரசாங்கம் உற்சாகமாக மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் இலங் கைக்கு வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி.வரிச்சலுகை தொடர்பான மேலதிக நடவடிக்கை களுக்காகவும், தற்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மீன்பிடி ஏற்றுமதி தடையை நீக்குவது தொடர்பான தீர்மானத்தை மேற் கொள்வதற்காகவும் இலங்கை நிலவரங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் குறித்த குழு வினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.