தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 வேங்கைகளின் 10 ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு!

0
362

 

பரிசின் புறநகர்ப் பகுதியான லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் அமைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவுத்தூபி அமைந்துள்ள இடத்தில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 10 ஆவது ஆண்டு நினைவெழுச்ச நிகழ்வு இன்று (02.11.2017) பகல் 15.00 மணிக்கு இடம் பெற்றது.


பொதுச்சுடரினை லாக்கூர்நோவ் நகரசபை உறுப்பினர் திரு அந்தோனி ரூசல் அவர்கள் ஏற்றிவைத்தார், தொடர்ந்து 07.03.2008 அன்று மன்னாரில் இடம் பெற்ற மோதலில் வீரச்சாவடைந்த லெப்ரினன் தமிழ்பிரியனின் சகோதரர் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலையினை அணிவித்தார்.


அகவணக்கத்தைத் தொடர்ந்து சுடர்வணக்கமும், மலர்வணக்கமும் இடம் பெற்றது.
சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்ப்பில் திரு சத்தியதாசன் ஆற்றினார்.

அவர் தனதுரையின் போது, நேற்றையதினம் இந்த இடத்தில் பிரான்சு ஆன்மாக்கள் நினைவு நாளில் லாக்கூர்நோவ் நகரசபை அஞ்சலிநிகழ்வு நடத்தியதற்கும், தமிழீழ விடுதலைபோராட்டத்தின் நியாயப்பாட்டை ஏற்று பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவு தூபி அமைப்பதற்கும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளராக இருந்த கோணல் பருதி அவர்களுக்கும் நினைவு சின்னம் அமைத்து எமது அரசியல் போராட்டத்தை அங்கிகரிப்பதாக அமைகின்றது. பிரான்சு ஆத்மாக்கள் தினமான நவம்பர் 01 திகதி ஆண்டுதோறும் இவ் இடத்தில் நடைபெறும் என்பதை லாக்கூர்நோவ் நகரசபை தனது தீர்மானத்தில் நிறைவேற்றி இருக்கின்றது. இதற்கு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது எனத் தெரிவித்தார்.
பிரிகேடியர் சு.ப.தமிழச்செல்வனின் செயற்பாடுகளே தமிழீழத் தேசியத்தலைவரால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது குறித்தும் அவரது அரசியல் இராச தந்திர நகர்வுகள் குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்


இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here