பிரான்சு ஆத்மாக்கள் நாளில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு!

0
754


பிரான்சின் ஆத்மாக்கள் தினமான இன்று (01.11.2017) பகல் 11.00 மணிக்கு தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவில் நடைபெற்றது.


ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரை லாக்கூர்நோவ் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு. புவனேந்திரன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து பிரிகேடியார் தமிழ்செல்வனின்நினைவுத்தூபிக்கும், தமிழ்ச்செல்வனுடன் வீரகாவியமான மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கும் ஈகைச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்தார் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் துணைவியார் சமநேரத்தில் கேணல் பருதியின் நினைவு தூபியில் கேணல்பருதியின் தாயார் ஈகைச்சுடர் ஏற்றி மலமாலை அணிவித்தார்.


அகவணக்கத்தைத் தொடர்ந்து லாக்கூர்நோவ் மாநகரசபை உறுப்பினர்களின் உரையும், பிரான்சு இளையோர் அமைப்பு உறுப்பினர், லாக்கூர்நோவ் தமிழ்ச்சங்கத்தலைவர், பிரிகேடியார் தமிழ்ச்செல்வனின் துணைவியார் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.


இந் நிகழ்வில் உரையாற்றிய இளையோர் அமைப்பின் பிரதிநிதி தமிழர்தாயகத்தில் தற்பொழுது இரண்டு குடிமக்களுக்கு ஒரு படையினர்வீதம் ஆக்கிரமித்திருப்பது குறித்தும், தமிழரின் பெரும் நிலப்பரப்பு படையினர் ஆக்கிரமித்திருப்பது குறித்தும், பிரெஞ்சு மொழியில் உரையாற்றினார். தொடர்ந்து தமிழர்கள் சிறீலங்கா சிறையில் அடைபட்டு இருப்பது பற்றியும் தனது உரையில் குறிப்பிட்டார்.


இந் நிகழ்வில் உரையாற்றிய பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் துணைவியார் இன்றைய தாயகநிலையில் புலம்பெயர்ந்து வாழும் நாம் ஒன்றுபட்ட அரசியல் செயற்பாட்டின் மூலம் எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.


இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் பாடலுடன் நிகழ்வு நிறைபெற்றது.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் நினைவுதூபிக்கு அருகாமையில் உள்ள வரைகலை மண்டபத்தில் தமிழ்சிறார்களின் வரைகலை வெளிப்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ந்து பத்துத் தினங்கள் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடகப்பிரிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here