அரசியல் கைதிகளின் விடுதலை கோரியும், அவர்களது வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கு மாற்றுமாறும் கோரிக்கைகளை முன் வைத்து, இன்று (30) யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிர்வாக முடக்கல் போராட்டத்தில் கைதடி சித்த மருத்துவ பீட மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.