யாழ்ப்பாணம் அரியாலையில் தாய் ஒருவர் தனது 3 பிள்ளைகளுடன் நஞ்சருந்தி உயிரை மாய்த்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று காலை 10 மணியவில் நடந்துள்ளது.
இரு ஆண் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிந்த குழந்தைகள் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரியவருகின்றது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
கடன் தொல்லையே தாய் தவறான முடிவெடுக்கக் காரணமாக அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பெண்ணின் கணவர் இரு மாதங்களுக்கு முன்னர் தவறான முடிவெடுத்து உயிரிழந்தார் என்றும், அதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.