பாரிசு லாச்சப்பல் பகுதியில் சிங்கள கைக் கூலிகளால் 26.10.1996 அன்று படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப் பொறுப்பாளர் லெப்.கேணல் நாதன் மற்றும ஈழமுரசு பத்திரிகையின் நிறுவக ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரின் 21 வது நினைவு நாள் இன்று.
தமிழர் தாயகத்தில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைகளால் அழிதொழிக்கப்பட்ட நிலையில் பிரான்சில் அமையப்பெற்றிருக்கும் இம் மாவீரர்களின் கல்லறையில் இன்று பகல் 15.00 மணிக்கு வணக்க நிகழ்வு நடைபெற உள்ளது.