யாழில் சிற்றூர்தி – உந்துருளி விபத்து: கண்டிவாசி பலி!

0
582

அதிவேகமாக வந்த சிற்றூர்தி தனது வேகக்கட்டுப்பாட்டை இழ ந்து வீதியால் சென்றவரை மோதித்தள்ளிய சம்பவத்தில்  படுகாயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி சம்பவ தினத்தன்றே யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

போகந்தலாவ கண்டியை சேர்ந்த இராசமாணிக்கம் பிரபாகரன், (வயது 34) என்ற நபரே மேற்படி உயிரிழந்தவராவார்.

குறித்த நபர் வியாபார நோக்கம் கருதி சுன்னாகத்தில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் காலை தனது நண்பர் ஒருவரை சுன்னாகம் தொடருந்து நிலையத்தில் இருந்து  உந்துருளியில் ஏற்றியபடி,  சுன்னாகம்அந்தோனியார் வீதி வழியாக வந்து பிரதான வீதியை கடந்து வலது பக்கமாக கந்தரோடை பக்கம் திரும்ப முற்பட்டுள்ளார்.

அப்போது கந்தரோடை பக்கமாக இரு ந்து அதிவேகமாக வந்த சிற்றூர்தி ஒன்று உந்துருளியில் வந்த அவர்களை மோதியுள்ளது.

30 மீற்றர் தூரத்தில் பிரேக் பிடித்தபடி அந்த சிற்றூர்தி வந்திருந்தும் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே மேற்குறித்த நபர் படுகாயம் அடைந்ததுடன் அவருடன் வந்த நபர் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்தார்.

உடனடியாக இவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும் நேற்று மாலை மேற்குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளார். குறித்த மரண விசா ரணையை யாழ்.போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here