அரியாலை கிழக்கு, மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப் பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஏழு மணிநேரம் தொடர்ச்சியான தீவிர சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 9.15 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், அரியாலை கிழக்கு மணியந்தோட்டம் உதயபுரத்தை சேர்ந்த டொன்பொஸ்கோ ரிக்மன் (வயது 24) இவர் கடற்தொழில் செய்து வரு கிறார்.
நேற்று கடற்தொழிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பின்னர், அவருடைய நண்பர் ஒருவர் குறித்த நபரை வெளியே அழைத்து சென்றுள்ளார்.
நேற்று பிற்பகல் 2.30 க்கும் 2.45 க்கும் இடைப்பட்ட நேரப்பகுதியில் குறித்த நபரும் அவருடைய நண்பரும் கொழும்புத்துறை சந்திக்கு சென்று தமது மோட்டார் சைக் கிளுக்கு பெற்றோல் நிரப்பி விட்டு அரியாலை கிழக்கு பக்கமாக சென்றுள்ளனர்.
அப்போது மணியந்தோட்டம் உதயபுரம் முதலாம் குறுக்கு கடற்கரை வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்றிருந்த இருவர் இவர் களுக்கு எதிரே தமது மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது இவர் கள் அந்த மோட்டார் சைக்கிளை கடந்து வர முயன்ற போது, மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த நபர் தனது இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இவர்களை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அந்த இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளனர்.
அப்போது பின்னால் இருந்த ரிக்மனின் இடது தோள்பட்டை பக்கமாக துப்பாக்கி சூடு பட்டு முன்பக்கம் நெஞ்சுப்பகுதி ஊடாக துப்பாக்கி சன்னம் வெளியே வந்துள்ளது. அந்த இடத்திலேயே மயக்கமடைந்த ரிக்மனை சற்றுத்தூரம் சென்று இறக்கி விட்டு குறித்த நண்பர் ஏனையவருக்கு தகவல் சொல்லியுள்ளார்.
பின்னர் அப்பகுதிக்கு வந்த சிலர் காயமடைந்த ரிக்மனை உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்த்தனர்.
அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
குறித்த இளைஞனின் வலது பக்க தோள் பகுதியில் துப்பாக்கி சன்னம் பட்டு முன்பக்க மார்புப்பகுதியால் வெளியே வந்திருந்ததுடன், நெற்றிப்பகுதியில் உராய்வுக்காயமும் காணப்பட்டது.
அதிகளவான இரத்தம் வெளியேறியமையால் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொலிஸ் புலனாய்வு துறையினரே சுட்டனர். உறவினர்கள் சந்தேகம்.
குறித்த இளைஞன் எவருடனும் பிரச்ச னைக்கு செல்வதில்லை. றோலர் மீன்பிடி தொழிலை செய்து வருகிறார்.
சம்பவதினமும் தொழிலுக்கு சென்று வந்து தான் வீட்டில் நின்றார். அவரது நண்பர் வந்து கூட்டிச்சென் றார். யாருடனும் இவருக்கு பகை இல்லை. ஆனால் சம்பவம் இடம்பெற்ற நேரத்துக்கு அண்மையில் ஒரு பொலிஸ் புலனாய்வாளர்,
அப்பகுதியில் பல தடவை சென்றதை எமது உறவினர்கள் பலர் கண்டுள்ளார்கள். சம்பவ இடத்துக்கு அண்மையிலும் சிலர் கண்டுள்ளார்கள்.
அந்த புலனாய்வாளரை ஏற்றி வந்தவர் சாதாரண நபர் ஒருவர் தான் அவரை விசாரணை செய்யுங்கள்.
சாதாரண நபர்கள் இங்கு கைத்துப்பாக்கி வைத்திருப்பதில்லை. பொலிஸ் துறையை சேர்ந்தவர்களே வைத் துள்ளனர்.
அவர்களுக்கு தெரியாமல் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என தெரிவித்து வைத்திய சாலையினுள் பொலி ஸாரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டி ருந்தனர்.
துப்பாக்கி ரவைகளை எடுத்துச்சென்ற இனந்தெரியாத நபர்கள்!
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு சோக்கோ பொலிஸார் தடயங்களை பெறச் சென்றிருந்தனர்.
அப்போது குறித்த இடத்துக்கு பொது மக்கள் வருவதற்கு முன்னர் அப்பகுதியில் ஒரு முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் துப் பாக்கி ரவைகளை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றதை தாம் அவதானித்ததாக அப்பகுதி மக்கள் பொலிஸா ரிடம் தெரிவித்தனர்.
ஆளை கண்டால் அடையாளம் காட்டுவேன்.
குறித்த படுகாயமடைந்த இளைஞனுடன் சென்ற அவரது நண்பரை பொலிஸார் யாழ் பொலிஸ் நிலையத் துக்கு கூட்டிச்சென்று தீவிர விசாரணை நடத்தியிருந்தனர்.
அப்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வர்களையார் என்று எனக்கு தெரியாது, ஆனால் ஆளை யார் என்று அடையாளம் காட்ட முடியும் என பொலிஸ் விசாரணையில் தெரிவித்தார்.
பொலிஸார், விசேட அதிரடிப்படை சம்பவ இடத்தில் குவிப்பு
அப்பகுதியில் உள்ள பொதுமக்கள். கடும் ஆக்ரோ சமாக காணப்பட்டதுடன் துப்பாக்கி பிரயோகத்தை மேற் கொண்டவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக் கப்பட வேண்டும் என கூறி பெரும் குழப்ப நிலையில் காணப்பட்டனர்.
அப்பகுதியில் மேலும் பதற்ற நிலை காணப்பட்டதால் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை நடத்திவருவதாகவும் நேற்றிரவுவரை எவரும் கைது செய் யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.