இரா­ணு­வத்தின் பிர­சன்­னத்தை குறைக்­க­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விரைவில் நீக்­க­வேண்டும் !

0
174


நம்­ப­க­ர­மான மற்றும் சுயா­தீ­ன­மான பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­னெ­டுத்து நீதியை நிலை­நாட் ­டா­விடின் சர்­வ­தேச மட்­டத்தில் நீதியை தேடு­வ­தற்­கான முயற்­சிகள் மிகவும் வலு­ வான முறையில் இடம்­பெறும் என்­பதை அனை­வரும் மனதில் கொள்­ள­வேண்டும் என்று இலங்­கை்­கான விஜ­யத்தை முன்­னெ­டுத்த உண்மை, நீதி, நட்­ட­ஈடு,மற்றும் மீள் நிக­ழாமை தொடர்­பான ஐக்­கிய நாடு­களின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் தெரி­வித்துள்ளார்.
சிறந்த உதா­ர­ண­மாக பிரேஸில் நாட்டில் அண்­மையில் இலங்­கையின் முன்னாள் இரா­ணுவத் தள­பதி ஜகத் ஜய­சூ­ரி­ய­விற்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கை குறிப்­பி­டலாம். இது போன்ற சம்­ப­வங்கள் எதிர்­கா­லத்தில் தொடர்ந்தும் இடம்­பெறும் என்றும் அவர் அச்சரித்தார்.
யுத்த வெற்­றி­வீ­ரர்­களை நீதி­மன்­றத்தின் முன் கொண்­டு­வ­ர­மாட்டோம் என யாரும் கூற முடி­யாது. அதனை நீதி­மன்­றமே தீர்­மா­னிக்­க­வேண்டும். யுத்த வெற்­றி­வீ­ரர்­களை இவ்­வாறு பாது­காப்­ப­தாக கூறு­வது சுயா­தீன நீதித்­து­றையின் பண்­பு­களை மீறு­வதைப் போன்­ற­தாகும் என்றும் ஐ.நா. பிர­தி ­நிதி தெரிவித்தார்.
பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை தொடர்ந்தும் தாம­த­மாக்­க­வேண்டாம். தொடர்ந்தும் இந்த செயற்­பாட்டை தாம­த­மாக்­கு­வது உள்­நாட்­டிலும் சர்­வ­தேச மட்­டத்­திலும் பல்­வேறு கேள்­வி­களை எழுப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றது. எனவே அர­சாங்கம் உட­ன­டி­யாக நம் ­ப­க­ர­மான பரந்­து பட்ட சுயா­தீ­ன­மான வெளிப்­படைத் தன்­மை­மிக்க அனை­வரும் பங்­கேற்­கக்­கூ டிய பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றையை முன்­வைக்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்­து­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதிகள் தொடர்­பான விட­யத்தை அர­சாங்கம் உட­ன­டி­யாக மீளாய்வு செய்­ய­வேண்டும். அத்­துடன் வடக்கு, கிழக்கில் இரா­ணு­வத்தின் பிர­சன்­னத்தை குறைக்­க­வேண்டும். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை விரைவில் நீக்­க­வேண்டும் என்றும் ஐக்­கி­ய­நா­டு­களின் விசேட நிபுணர் சுட்­டிக்­காட்­டினார்.
14 நாள் உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்ட உண்மை, நீதி, நட்­ட ­ஈடு,மற்றும் மீள் நிக­ழாமை தொடர்பான ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பப்லோ டி கீரீப் நேற்று (23) தனது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்கு முன்பதாக கொழும்பில் ஊடகவிய லாளர்களை சந்தித்து தனது மதிப்பீடுகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்தபோதே மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here