யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவு வணக்கம் !

0
280


சர்வதேச போர் விதிகளை மீறி சமாதானப் படையாக வந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 30வது ஆண்டு நினைவுநாள் தினம் நேற்று நினைவு கூரப் பட்டது ..
யாழ். போதனா வைத்தியசாலையில் 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22 ஆம் திகதிகளில் வைத்தியசாலை வளாகத்துக்குள் நுழைந்த இந்திய படையினரால் சுட்டுப்படுகொலை செய்ய்பட்ட 21 பேரின் நினைவு தினம் நேற்று நினைவு கூரப்பட்டது.
30வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு நேற்றுக் காலை 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான நினைவு நிகழ்வில் உயிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் இடம்பெற்றது.
உயிரிழந்தோரின் உறவினர்களினால் மலர்அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுரைகளும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டோரின் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here