தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 9 நாட்களாக உண்ணாவிரதம்!

0
192

தமிழ் அரசியல் கைதிகள் மூன்று பேர் அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த ஒன்பது நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்,

அரசோடு ஒட்டியிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலை மைத்துவம் நடவடிக்கை ஒன்றும் எடுக்காததன் காரணமாகவே அந்த கைதிகளின் உறவுகளையும் போரா டுவதற்கு வீதிக்கு தள்ளியுள்ளது என அரசியல் கைதிகளை விடு தலை செய்வதற்கான அமைப்பு கடு மையாக சாடியுள்ளது.

இது தொடர்பில் அந்த  அமைப் பின் தலைவர் அருட்தந்தை மா. சத்திவேலினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் கைதிகளில் மூவர் தொடர்ந்தும் தமது கோரிக்கையை வலியுறுத்தி 9வது நாளாகவும் உண்ணா விரதம் இருக்கின்றனர்.

அவர்களின் குடும்ப உறவுகள் இது தொடர்பில் தமிழரசுக்கட்சி பணி மனைக்கு கடிதம் ஒன்றை கையளித்து தீர்வை துரிதப்படுத்துமாறு கோரி அமைதிப் போராட்டம் நடத்தியுள்ள தற்போது அரசியல் கைதிகளின் உறவுகளும் வீதிக்கு வந்து விட்டனர்.

ஏற்கெனவே நிலங்களை இழந்தோர், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கேட்டு வீதிக்கு வந்துள்ளனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்ப ட்ட தினத்திலிருந்தே அவர்களின் குடும்ப உறவுகள் சமைத்த உணவுக்கு முன்னாக கண்ணீரோடு அமர்ந்து வேதனைப்படுகின்ற னர். உண்ணாவிரதத்தில் 9வது நாளில் கண்ணீரோடு வீதிக்கு வந்துள்ளார்கள் என்று கூறுவதை விட அரசோடு ஒட்டியிருக்கும் தமிழ் அரசியல் தலைமைத்துவம் வீதிக்கு தள்ளி விட்டது என்றே கூற வேண்டும்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் ஏனைய அரசியல் கைதிகள் நேற்று முன்தினம் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொ ண்டு தமது சகாக்களின் நீதிக்கான போராட்ட த்திற்கு ஆதரவு நல்கி உள்ளனர்.

இத்தகைய போராட்டம் ஏனைய சிறைச் சாலைக்கும் விரிவடையலாம். தமிழர் பகுதிகளிலும் தொடரலாம். இதனையா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமைத்து வமும் எதிர்பார்க்கின்றது.

உணவு தவிர்ப்பு அரசியல் கைதிகளின் நீதியான கோரிக்கைக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்க முனையுமாறும் அரசியல் கைதிகள் அனைவரும் அரசியல் தீர்மானத் திற்கு ஊடாக விடுதலை பெறுவதற்கான ஆக்க பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவ தோடு இல்லையெனில் இது வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கி ன்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here