தீர்வின்றி தொடரும் கேப்பாபிலவு பூர்வீக மக்களின் நில மீட்பு போராட்டம் !

0
189

கேப்பாபிலவு பூர்வீக மக்களின் நில மீட்பு போராட்டம் இன்றுடன் ஏழு மாதங்களை எட்டியுள்ள நிலையில் புத்தூர் மேற்கு கலைமதி கிராம மக்கள் மற்றும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆகியோர் போராட்ட இடத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கேப்பாபிலவு பூர்வீக கிராமத்தை விடுவிக்குமாறு வலியுறுத்தி கேப்பாபிலவு சிறீலங்கா இராணுவ முகாமிற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அக்கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.
இன்று போராட்ட இடத்திற்கு சென்ற சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் மற்றும் கலைமதி கிராம மக்கள் தம்மை போன்று கேப்பாபிலவு மக்களுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கவேண்டும் என தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here