கொலையாளிகள் வழங்கும் பணம் சிறிதும் வேண்டவே வேண்டாம்!

0
475


தனது மகளை ஈவிரக்கமின்றி கொலை செய்த பாதகர்கள் வழங்கும் ஐந்து சதம் பணமும் தனக்கு வேண்டாமென, யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.
வித்தியா கொலையாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை வழங்கிய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், வித்தியாவின் குடும்பத்திற்கு நட்டஈடாக ஏழு பேரும் தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்க வேண்டுமென உத்தரவிட்டது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வித்தியாவின் தாயாரான சிவலோகநாதன் சரஸ்வதி, தன் மகளை விட பணம் முக்கியமானதல்ல என்றும் அதிலும் கொலையாளிகள் வழங்கும் பணம் சிறிதும் வேண்டவே வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தனது மகளை கல்வியில் முன்னேற்ற தான் அரும்பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ள வித்தியாவின் தாயார், தான் கண்ட கனவு மண்ணோடு மண்ணாக போய்விட்ட நிலையில் இனி எதுவும் வேண்டாமென விரக்தியுடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here