வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழீழ மாவீரர் துயிலும் இல்லங்களை வேறுவடிவத்தில் மாற்று வதை விடுத்து, அவை மீளவும் சீரமைக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் வலி யுறுத்தப்பட்டது.
வடக்கு மாகாணசபையின் 106ஆவது அமர்வு அவைத் தலைவர் தலைமையில் நேற்று (28) இடம் பெற்றது. இந்த அமர்வில் அக்கரை கடற்கரையை சுற்றுலாத் தளமாக்குவது தொடர்பாக கருத்து களைப் பதிவுசெய்யும்போதே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அஸ்மின் மற்றும் ஆனோல்ட் தெரிவித்த தாவது:
வடக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை தாவரவியல் பூங்காவாக மாற்றவேண்டிய தேவை இல்லை. எதற்காக நாம் அவற்றைப் பூங்காவாக மற்றவேண்டும்.
இலங்கை சட்ட ஏற்பாடுகளின்படி கல்லறைகளை அமைப்பதற்கு அனுமதிகள் இருக்கின்றன. எனவே நாம் மாவீரர் துயிலும் இல்லங்களை பூங்காவாக மாற்றுவடிவம் செய்யவேண்டிய தேவை எமக்கு இல்லை.
நாம் மாவீரர் துயிலும் இல்லங்களை முன்பிருந்தவாறே சீரமைக்கமுடியும். உரிமைக்காகப் போராடிய மாவீரர்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய மரியாதைகளை கொடுக்கவேண்டும் -என்ற னர்.
Home
ஈழச்செய்திகள் மாவீரர் துயிலும் துயிலும் இல்லங்களை பூங்காக்களாக்க வடக்கு மாகாண சபையில் எதிர்ப்பு!