தொடர்ந்து போராட வேண்­டிய நிர்ப்­பந்­தத்­தையே இந்த இடைக்­கால அறிக்கை எமக்கு நல்­கி­யுள்­ளது!

0
376


வெளி­யா­கி­யுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்­பில், கேள்வி பதி­லாக வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் திரு சி.வி.விக்­னேஸ்வரன் அவர்கள் அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:
‘உத்­தேச அர­ச­மைப்­புத் திருத்­தத்­துக்­கான இடைக்­கால அறிக்கை வெளி­வந்­துள்ள நிலை­யில் தமி­ழர் தரப்­பி­லி­ருந்து பர­வ­லான அதி­ருப்­தி­யும் எதிர்ப்­பும் கிளம்­பி­யுள் ளதை அவ­தா­னிக்­கக் கூடி­ய­தாக உள்­ளது. இது தொடர்­பில் தங்­க­ளது நிலைப்­பாடு என்ன?’
பதில் – முழு­மை­யாக ஆவ­ணத்­தைப் பரி­சீ­லிக்க எனக்கு நேரம் போத­வில்லை.
எனது அவ­தா­னம், ஒரு­வர் நோயுற்­றி­ருந்­தால் அந்­த­நோய் என்ன? என்று முத­லில் அறிந்­து­கொள்ள வேண்­டும். அதன்­பின் அந்த நோய்க்கு எவ்­வா­றான சிகிச்சை அளிக்­க­வேண்­டும் என்று ஆரா­ய­வேண்­டும். அந்த ஆராய்­வின் முடி­வில் சிகிச்சை ஆரம்­பிக்­கப்­பட்டு நோயைத் தீர்க்­க­மு­யற்­சிக்­க­வேண்­டும்.
இப்­போது எமது நோயைச் சரி­யா­கப் புரிந்து கொள்­ள­வில்லை என்­பதே எனது கருத்து. நோயைப் புரிந்து கொள்­ளாது மருந்­து­க­ளைப் பற்­றிய சர்ச்­சை­யில் ஈடு­பட்­டுள்­ளோம். நோயைப் புரிந்து கொள்ள நோயின் சரித்­தி­ரம் மிக­அ­வ­சி­யம். எவ்­வா­றான பின்­பு­லம் இன்­றைய நோயை ஏற்­ப­டுத்­தி­யது என்று அறிந்­தால்­தான் உரிய சிகிச்­சை­யைப் பரிந்­து­ரைக்­க­லாம். நோயைப் புரிந்­து­கொள்­ளாது சிகிச்­சை­யில் நாம் ஈடு­பட்­டுள்­ளோம் என்­பதே எனது அவ­தா­னம்.
இடைக்­கால அறிக்கை நோயை அறிந்­த­தா­கவோ, தீர்க்­கப் போது­மா­ன­தா­கவோ தென்­ப­ட­வில்லை. நோயை அறி­யாத சிகிச்சை தோல்­வி­யில் முடி­யும்.
இடைக்­கால அறிக்கை தமி­ழர்­க­ளுக்கு மிகுந்த ஏமாற்­றத்­தை­யும் அதி­ருப்­தி­யை­யும் ஏற்­ப­டுத்­தும் என்­பது திண்­ணம். சிங்­கள பௌத்த மேலா­திக்­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தா­கவே உள்­ளது. எத­னைப் புறக்­க­ணித்து நாம் எழு­பது வரு­டங்­க­ளுக்கு மேலா­கப் போராடி வந்­தோமோ அதனை வலி­யு­றுத்­து­வ­தா­கவே அறிக்கை அமைந்­துள்­ளது.
சிங்­க­ளத் தலை­வர்­கள் அர­சி­யல் அதி­கா­ரத்­தைத் தம்­வ­சம் எடுத்­துக் கொண்டு தாம் செய்­ததே சரி­யென்ற அடிப்­ப­டை­யில் இது­வ­ரை­கா­ல­மும் நடந்­து­கொண்­டதே எமது அர­சி­யல் நோய்க்கு மூல கார­ணம்.
ஒற்­றை­யாட்­சியை நிரா­க­ரித்து தமக்­கு­ரிய அர­சி­யல் தீர்­வாக கூட்­டாட்­சிக் (சமஷ;டி) கோரிக்­கை யைத் தமி­ழர்­கள் முன்­வைத்­துள்­ள­நி­லை­யில் தொடர்ந்­தும் ஒற்­றை­யாட்சி முறை­மை­யைத் தக்­க வைக்­கும் பொருட்டு வார்த்­தைப் பிர­யோ­கங்­க­ளில் ஏமாற்ற முற்­பட்­டுள்­ளமை அரு­வ­ருப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது.
ஒரு­நாட்­டி­னு­டைய ஆட்­சிக் கட்­ட­மைப்­பைக் குறிக்­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் பன்­னாட்டு ரீதி­யில் ஏற்­றுக் கொள்­ளப்­ப­டக் கூடிய ஒரு பொருத்­த­மான வார்த்­தை­யைப் பயன்­ப­டுத்­தாது ‘ஏகி­ய­ரட’ என்­கின்ற சிங்­க­ளச் சொற்­ப­தத்­தைப் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்­கள். ‘எக்­சத்’ என்ற பதத்­தைப் பாவிக்­காது ‘ஏகி­ய­ரட’ என்று கூறி­யமை அறிக்கை ஆக்­கி­யோ­ரின் கப­டத் தனத்தை வெளிக்­காட்­டு ­கின்­றது.
தமிழ் மக்­க­ளின் சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு இணைந்த வடக்கு – கிழக்­கில் கூட் டாட்சி அடிப்­ப­டை­யி­லான அதி­கா­ரம் பகி­ரப்­ப­ட­வேண்­டும் என்­கின்ற தமிழ் மக்­க­ளின் கோரிக்கை இந்த இடைக்­கால அறிக்­கை­யில் முற்­றாக நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே கரு­த­மு­டி யும்.
‘தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புத் தேர்­தல் காலத்­தில் வாக்­கு­றுதி அளித்­த­வாறு வடக்கு – கிழக்கு இணைப்­பு­பற்­றி­யும் ஐக்­கிய இலங்கை – மாகா­ணங்­க­ளின் ஒன்­றி­ணைப்பு பற்­றி­யும் பின்­னி­ணைப் ­பில் வலி­யு­றுத்­தி­யுள்­ளதே அது பற்றி தாங்­கள் என்ன நினைக்­கி­றீர்­கள்?’
பதில் – அறிக்­கை­யின் ஆங்­கி­லப் பிர­தி­யைப் பார்த்­தீர்­க­ளா­னால் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு ஏறத்­தாழ 70 வரு­டங்­க­ளாக தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கும் எமது இனத் ­தின் கோரிக்­கை­களை வெறும் ஒன்­றே­கால் பக்­கத்­துக்­குள் அடக்­கி­யி­ருக்­கின்­றது என்­பது தெரி­ய­வ ­ரு­கின்­றது. வேறு அறிக்­கை­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ளதே தவிர திட­மா­கத் தமக்கு வேண்­டி­ய­வற் றைக் கூறத் தவ­றி­யுள்­ளது. வடக்கு மாகாண சபை­யும் தமிழ் மக்­கள் பேர­வை­யும் போது­மான விவ­ரங்­க­ளு­டன் தமது அறிக்­கை­க­ளைச் சமர்ப்­பித்­தி­ருந்­தன.
மத்­திய அர­சுக்­கும் மாநி­லத்­துக்­கும் இடையே அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­ட­வேண்­டும் எனக் கூறப்­ படு­கின்­றதே தவிர, என்­னென்ன அதி­கா­ரங்­கள் மாநி­லத்­துக்கு ஒதுக்­கப்­ப­ட­வேண்­டும் என்­பன பரிந்­துரை செய்­யப்­ப­ட­வில்லை. ஒட்டு மொத்­தத்­தில் இந்த இடைக்­கால அறிக்­கை­யா­னது தமி­ழ ­ரின் இனப் பிரச்­சனை தொடர்­பான பய­ணத்தை பின்­னோக்கி நகர்த்­தி­யுள்­ள­தா­கவே கரு­த­லாம்.
‘இந்த இடைக்­கால அறிக்­கைக்கு நீங்­கள் ஆத­ரவு வழங்­கு­வீர்­களா?’
பதில் – நோய்க்கு மருந்து கொடுக்­கா­விட்­டால் நோய் தீராது. தொட­ரப் போகும் நோய்க்கு ஆத­ரவு வழங்­கச் சொல்­கி­றீர்­களா? அரை­கு­றைத் தீர்வு ஒரு போதும் நோய்க்கு மருந்­தா­காது. தொடர்ந்து போராட வேண்­டிய நிர்ப்­பந்­தத்­தையே இந்த இடைக்­கால அறிக்கை எமக்கு நல்­கி­யுள்­ளது. எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here