விடுதலைச்சுடர் 18.02.2015 பிரித்தானியாவில் ஏற்றப்பட்ட தமிழீழ மக்களின் விடுதலை உணர்வைக்கொண்ட விடுதலைச்சுடர் 14 வது நாளாக இன்று பிரெஞ்சுப்பாராளுமன்றம் முன்பாக தனது கவயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தது. பிரான்சில் பாராளுமன்றம் அமைந்து இன்வலிட் பகுதியில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது .
தமிழ்ச்சங்கங்க கூட்டமைப்பின் உறுப்பினரும், ஒன்லிசூபுவா தமிழ்ச்சங்க தலைவருமாகிய திரு. விசுவநாதன் அவர்கள் விடுதலைச்சுடரினை ஏற்றி வைத்திருந்தார்.
கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்திய அதே வேளை பாராளுமன்ற கட்டிடத்திற்குள்ளும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான முக்கிய சந்திப்புக்கள் நடைபெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மாலை 17.00 மணிவரை நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டம் நாளை நடைபெறவிருக்கும் கிளிச்சி பிரதேச தமிழ்ச்சங்க பொறுப்பாளர் திரு. சச்சிதானந்தம் அவர்களின் கரங்களில் விடுதலைச்சுடர் கொடுக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.