புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள சுதந்திரபுரம் குடியிருப்பு பகுதியில் அனுமதிப்பத் திரம் இன்றி மணலை ஏற்றி பயணித்த உழவு இயந்திரத்தை வன வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் துரத்திச் சென்ற போது, வேகமாக தப்பிச் சென்ற உழவு இயந்தி ரத்தின் பக்க வாட்டில் இருந்து பயணித்த இளைஞர் ஒருவர் தவறி வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் ஒன்று நடை பெற்றுள்ளது.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை பிற்பகல் வேளை நடை பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
சுதந்திரபுரம் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளார்கள் என்று கிடைத்த இரகசியத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனவளத் திணைக்கள த்தினர் மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த உழவு இயந்திரத்தை துரத்தி சென்ற வேளை அதி வேகமாக சென்ற உழவு இயந்திரத் தின் பக்க வாட்டில் (மக்காட்டில்) இருந்து பய ணித்த இளைஞன் ஒருவன் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் வள்ளிபுனம் முருகன் ஆலய சுற்றாடல் பகுதியில் வசிக்கும் செல் லையா செல்வன் (வயது – 20) என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனது சடலம் முள்ளியவளை மாஞ்சோலையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசா லையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படை த்துள்ளதுடன், புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.