குடும்பஸ்தர் ஒருவர் கடத்திச் செல்லப் பட்டு பலமாக தாக்கப்பட்ட காரணத்தினால் குறித்த குடும்பஸ்தர் நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி யாழ் போதனா வைத்திய சாலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நாவலர் வீதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான செல்வநாயகம் தன பால சிங்கம் (வயது 38) என்பவரே மேற்படி உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணம் நாவலர் வீதி, புகை யிரதக் கடவைக்கு அண்மையில் அமைந் துள்ள குறித்த குடும் பஸ்தரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் 3 பேர் கொண்ட குழு வினர் வந்துள்ள னர். குறித்த நபரை அழைத்து அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.
அப்போது தந் தையை காப்பாற்ற முனைந்த மகனை தாக்கி விட்டு தந்தை யை இழுத்துச் சென்றுள்ளனர்.
காயமடைந்த மகன் வைத்தியசாலை யில் அனுமதிக்கப பட்டதுடன் குறித்த விடயம் தொடர்பில் குடும்பத்தினர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்றையதினம் அதிகாலை நல்லூர் பண்டாரிக்குளம் அரு கில் உள்ள பிள்ளை யார் கோவில் தேர் முட்டிக்கு அருகில் வெட்டுகாயங்களுக்கு உள்ளாகிய நிலை யில் குற்றுயிருடன் ஒருவர் கிடப்பதை அவதானித்த அப் பகுதி மக்கள் பொலி ஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த நபர் யாழ் போதனா வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி சிலமணி நேரங்களின் பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் கடத்தி செல்லப்பட்ட குடும்பஸ் தர் என்று அடையாளம் காணப்பட்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பொலி ஸார், உயிரிழந்த வரின் குடும்பத்தினரிடம் பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படை யில் நேற்று முன்தி னம் குறித்த நபரை கடத்தி சென்றவர்கள் என சந்தேகிக்கப்பட்ட அதே இடத்தை சேர்ந்த சகோதரர்கள் மூவரை கைது செய்வதற்காக அவர்களுடையவீட்டுக்கு தேடி சென்றுள்ளனர்.
அங்கு பொலிஸார் தேடிச்சென்ற மூன்று சந்தேக நபர்களும் இல்லாத காரணத்தி னால் அவர்களின் மூத்த அண்ணனை யும் அவர்களது தகப் பனையும் பொலி ஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதே வேளை உயிரிழந்த குடும் பஸ்தருக்கு எதிராக அண்மையில் மாடு ஒன்றை கடத்தி சென்ற சந்தேகத்தின் அடிப் படையில் நீதிமன்றில் வழக்கு நடை பெற்று வருகின்ற மை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மு ற்பகை காரணமாக இந்த கொலை இடம் பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.