இலங்கை அரசுக்கு எதிரான ஐ.நாவின் விசாரணை அறிக்கை வெளியாவதைப் பிற்போட்டதில் உடன்பாடில்லை என்று கூறியுள்ளது பிரிட்டன்.
இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியவர்கள் என்ற ரீதியில், அந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் குசைன், இலங்கை அரசுக்கு எதிரான விசாரணை அறிக்கை செப்ரெம்பர் மாத அமர்விலேயே வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளார்.
அறிக்கை வெளியிடுவதில் 6 மாதங்கள் தாமதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறித்துத் தனது டுவிட்டர் கணக்கில் கருத்து வெளியிட்ட பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹியூகோஸ்வயர்.
அறிக்கையை வெளியிடுவதில் பிரிட்டன் இன்னமும் உறுதியாக இருக்கின்றது.இலங்கையில் நடந்த சம்பவங்கள் தொடர்பில் உண்மை கண்டறியப்படுவது நல்லிணக்கத்தை நோக்கிய முக்கிய நகர்வாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருவாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்திருந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஐ.நா.அறிக்கைபிற்போடப்படாது என்று வடக்கு மாகாண முதலமைச்சரிடம் தெரிவித்திருந்தார்.