தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 4ஆவது தடவையாக நடாத்திய கேணல் பரிதி, லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோர் நினைவு சுமந்த உதைபந்தாட்டப் போட்டி 2017 நேற்று (17.09.2017) ஞாயிற்றுக்கிழமை பிரான்சு Bondy பகுதியில் காலை 09 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 08.11.2012 அன்று பிரான்சில் வீரச்சாவடைந்த கேணல் பரிதியின் தாயார் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு விளையாட்டுத்துறையினர் போட்டியில் பங்குபற்றும் அணிகளை வரவேற்று போட்டிகளை ஆரம்பித்துவைத்தனர். தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன.
13 வயதின் கீழ்
1ஆம் இடம் : 93 தமிழர் விளையாட்டுக் கழகம்
2ஆம் இடம் : காந்தீஜீ விளையாட்டுக் கழகம்
3ஆம் இடம் : யாழ்ட்டன் விளையாட்டுக் கழகம்;
இறுதி ஆட்ட நாயகன்
நீவேதன்; ( 93 தமிழர் விளையாட்டுக் கழகம்)
சிறந்த விளையாட்டு வீரன்
பரந்தாமன் ( 93 தமிழர் விளையாட்டுக் கழகம்)
சிநோத் (காந்தீஜீ விளையாட்டுக் கழகம்)
15 வயதின் கீழ்
1ஆம் இடம் : விண்மீன் விளையாட்டுக் கழகம்
2ஆம் இடம் : நல்லூர்ஸ்தான் விளையாட்டுக் கழகம்
3ஆம் இடம் : யாழ்ட்டன் விளையாட்டுக் கழகம்;
இறுதி ஆட்ட நாயகன் பிரவீன் (விண்மீன் விளையாட்டுக்கழகம்)
மேற்பிரிவு
1ஆம் இடம் : 93 தமிழர் விளையாட்டுக் கழகம்
2ஆம் இடம் : வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம்
3ஆம் இடம் : யாழ்ட்டன் விளையாட்டுக் கழகம்;
இறுதி ஆட்ட நாயகன்
சுபன்; ( 93 தமிழர் விளையாட்டுக் கழகம்)
சிறந்த விளையாட்டு வீரன்
சீனிவாசன் ( வல்வை புளுஸ் விளையாட்டுக் கழகம்;)
பிரகாஷ் (93 தமிழர் விளையாட்டுக் கழகம்)