இந்திய அரசாங்கத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வீரச்சாவடைந்த லெப். கேணல் தியாக தீபம் திலீபனின் நினைவுநாள் தாயக மண்ணிலும் புலம்பெயர் தேசங்களிலும் நேற்று மிகவும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்திய அரசிடம் ஐந்து கோரிக் கையை முன்வைத்து திலீபன் நேற்றைய தினம் உண்ணாவிரத த்தை ஆரம்பித்த நாளாகும். இந்த நாளில் அவரது தியாகத்தை நினைவு கூரும் வகையில் தமிழர் தாயகம் எங்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் தான் உலக தமிழ் இளைஞர்களுக்கும் அகிம்சை போராட்டத்திற்கும் எடுத்துக்காட்டாக வும் உள்ள திலீபனின் உண்ணா விரத ஆரம்ப தினமான நேற்று தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகள் பிரதானமாக யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் உணர்ச்சி பூர்வ மாக நடைபெற்றிருந்தன.
இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு திலீபனுக்கு அஞ்சலி செலுத்தி யிருந்தனர். முன்னதாக காலை 10 மணியள வில் ஆரம்பமாகிய இந்த நிகழ்வுகளில்,
திலீபனின் பாடல் இசைக்க விடப்பட்டு மாணவர்கள் ஒவ்வொருவராக அஞ்சலி செலு த்தியிருந்தனர்.
இதே போன்று நல்லூரில் இடித்து அழிக்கப்பட்டுள்ள நினைவு தூபியி லும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற் றும் ஜனநாயக போராளிகள் கட்சியினர் ஆகி யோரது ஏற்பாட்டில் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளில் தமிழ்த்தேசிய மக் கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் முன்னாள் போராளிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதே போன்று முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் புலம்பெயர் தேசங்களான இந்தியா, ஐரோப் பிய நாடுகளிலும் நினைவு நிகழ்வுகள் எழு ச்சியுடன் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை யாழ்.பல்கலையில் நேற்றைய தினம் ஆர ம்பமாகிய நினைவு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிமுதல் பத்து மணிவரையிலான இரண்டு மணித்தியாலங்கள் அஞ்சலி நிக ழ்வுகள் நடைபெறும் என மாணவர் ஒன்றிய தலைவர் அறிவித்துள்ளார்.
திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறு ப்பினராகவும் இருந்தவராவார்.
இவர் யாழ்ப் பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்த வர். இவரின் மறைவின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் லெப்டினன்ட் கேணல் திலீபன் எனும் நிலை வழங்கப்ப ட்டது.
இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சை வழியில் சொட்டு நீரும் அருந்தா உண்ணா விரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறை வேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணா விரதத்தில் உயிர்துறந்தவர்.
இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்கு மிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு இது ஒரு முக்கிய காரணம் என தெரிவிக்கப்படு கின்றது.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம் சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணா விரதத்தை ஆரம்பித்தார்.1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன்ட் கேண லாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப் பாளராக இருந்த திலீபன் மரணம் எய்தினார்.
ஐந்து அம்சக் கோரிக்கை வருமாறு,
1.மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வட க்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியே ற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2.சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்க ப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் யாவ ரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3.அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப் படவேண்டும்.
4.ஊர்காவல் படையினருக்கு வழங்கப் பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்.
5.தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ள ப்படும்
நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்களை திலீபன் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.