முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன கைது!

0
309

அரசாங்க வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின்பேரில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக இருந்த காலத்தில் 85 இலட்சத்து 95 ஆயிரம் பெறுமதியான சொகுசு வாகனத்தை கொள்வனவு செய்திருந்தபோதும் அதனை மீண்டும் கையளிக்காது பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இவர் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதிபதி லங்கா ஜயரட்ன உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நேற்று அழைக்கப்பட்டிருந்த சரண குணவர்தன விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் பின்னர் கைதுசெய்யப்பட்ட இவர் கோட்டை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். சந்தேகநபர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அணில்.டி.சில்வா தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகியிருந்ததுடன், பிணையில் விடுவிக்குமாறு கோரியிருந்தது. எனினும் பிணை வழங்குவதற்காக முன்வைக்கப்பட்ட காரணங்கள் போதுமானதாக இல்லையென்றும், அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்யும் சட்டத்தின் கீழ் 25 ஆயிரம் ரூபாவுக்கு மேலதிகமான பெறுமதியை துஷ்பிரயோகம் செய்திருந்தால் அதற்கு பிணைவழங்க முடியாது என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here