மன்னார் திருக்கேதீஸ்வர சிவராத்திரி நிகழ்வில் இலட்சக்கணக்கில் பக்தர்கள்!

0
1689


வரலாற்றுப் புகழ் மிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிவராத்திரி நிகழ்வுகள் மிகவும் பக்திப் பரவசத்தடன் இடம் பெற்றதுடன் இந் நிகழ்வுகளில் வட பகுதி உட்பட நாட்டின் பல இடங்களில் இருந்தும் வந்த இலட்சக் கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

நேற்று காலைமுதல் அடியவர்கள் ஆலய சுற்றாடலில் கூடத் தொடங்கியதுடன் பிற்பகல் முதல் இன்று அதிகாலை வரை தொடர்ச்சியாக பல ஆயிரக்கணக்கான அடியவர்கள் பாலாவித் தீர்த்தக்கரையில் நீராடி பக்தியுடன் குடங்கள் செம்புகளில் பால் மற்றும்  தண்ணீர் எடுத்து வந்து ஆலயத்தின் உள்ளே கிழக்குப் புறத்தில் அமைந்துள்ள சிவலிங்கத்திற்கு ஈர உடையுடன்  நீர் வார்த்து தமது நேர்த்திகளை நிறைவேற்றிக் கொண்டனர்.ஆலயத்தின் முன்புறத்தில் அமைக்கப்பட்ட கொட்டகையில் கதாப்பிரசங்கங்கள், பண்ணிசைகள், நடனங்கள் என சிவனின் புகழ்பாடும் நிகழ்வுகளும் இன்று காலை வரை இடம் பெற்றன.ஆலயத்தின் உள்வீதிகள் வெளி வீதிகள் என நான்கு புறங்களிலும் அடியவர்கள் சிவனிடம் வரம்வேண்டி நித்திரை விழித்தனர்.

ஆலய சுற்றாடலில் இருந்த மடங்களில் நேற்று முதல் இன்று நண்பகல் வரை அன்னதான நிகழ்வுகள் அடியவர்களுக்கு இடம்பெறுகின்றன.ஆலயச் சுற்றாடலில் பாதுகாப்புக் கடமையில் பொலிசார் சீருடையிலும் சிவில் உடையிலும் காணப்பட்டதுடன் சாரணர்கள், புனித யோவான் முதலுதவிப் படையினர் மற்றும் தொண்டர்களும் ஆலய சுற்றாடலில் கடமையில் ஈடுபட்டனர்.இலங்கை போக்குரத்து சபையினதும் மற்றும் தனியார் மினி பஸ்களினதும் சிறப்புச் சேவைகள் வவுனியா மற்றும் மன்னாருக்கு அடிக்கடி இடம் பெற்றதுடன் தூர இடங்களுக்கான பஸ்சேவைகளும் இடம்பெற்றன.

இதேவேளை, முன்னேஸ்வரம், கோணேஸ்வரம், நகுலேஸ்வரம் மற்றும் மாமாங்கேஸ்வர பஞ்ச ஈஸ்வர ஆலயங்களிலும் சிவராத்திரி தின விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.

2 (1)16 (1)5 (2)11 (1)15 (1)1617 (1)
03(39)





LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here