அரியாலை தொடருந்து விபத்தில் பிரபல தமிழ் ஆசிரியையின் கணவர் பலி!

0
183

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்தில் சிக்கியே உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.
குறித்த விபத்து இன்று அதிகாலை யாழ்.புங்கன்குளம் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்றுள்ளதுடன் ரயிலில் பயணித்தவர் தொடருந்தில் இருந்து கீழே இறங்க முற்பட்டபோதே தவறுதலாக கீழே விழுந்து தொடருந்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தின் பிரபல தமிழ் ஆசிரியையான மீராவின் கணவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான 53 வயதுடைய அருள்நேசன் என்பவரே உயிரிழந்தவராவார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ் வைத்தியசாலையில் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here