அறிக்கை தாமதித்தாலும் இலங்கைக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கவில்லை: நிமல் சிறிபால டி சில்வா

0
248

nimal-sripala-desilvaஇலங்கைக்கு எதிரான ஜெனீவா விசாரணை அறிக்கையை பிற்போடுவதற்கு ஐ. நா. மனித உரிமைப் பேரவை தீர்மானித்திருப்பதை வரவேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இருந்த போதும், இதனால் இலங்கைக்கு எதிரான அச்சுறுத்தல் முற்றாக நீங்கவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டினார்.

எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட இருந்தது. இதனை ஆறு மாதங்களுக்கு ஒத்திவைக்க மனித உரிமை பேரவை தீர்மா னித்திருப்பது குறித்து கருத்துத் தெரிவித்த அவர், விசாரணை அறிக் கையை பிற்போட நடவடிக்கை எடுத்தது குறித்து அரசாங்கத் திற்கு எமது பாராட்டை தெரிவிக்கிறோம். எந்த அரசாங்கம் செய்தாலும் நல்ல விடயங்களை வரவேற்க வேண்டும்.

விசாரணை அறிக்கை பின்போடப்பட் டதால் எமது நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல் ஓய்ந்துவிட்டது என்று எண்ணிவிட முடியாது. இன்னும் அச்சுறுத்தல் இருக்கவே செய்கிறது.

வட மாகாண சபையில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனடிப்படையில், இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்துமாறு பல டயஸ்போரா அமைப்புகள் மனித உரிமை பேரவையை கோரியுள்ளன. எனவே எமக்கு எதிரான சர்வதேச அழுத்தங்கள் தொடர்ந்தும் இருக்கவே செய்கிறது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here