ஜெகத் ஜெயசூரிய மீது சித்திரவதை குற்ற வழக்கு ;பிரேசிலிலிருந்து தலைமறைவு!

0
172

பிரேசில் நாட்டுக்கான இலங்கை தூதுவரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெகத் ஜெயசூரிய மீது மனித உரிமை அமைப்பு ஒன்றிணைந்து பிரேசில் நாட்டில் சித்திரவதை குற்ற வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ள நிலையில் அவர் அந்த நாட்டில் இருந்து தலைமறைவாகி யுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 2007-2009ஆம் ஆண்டு காலப்பகுதியில், வன்னி பிரதேசத்தில் இராணுவ படைகளுக்கு தலைமை வகித்த வர் தளபதி ஜெகத் ஜெயசூரிய.

இவர் மீது யுத்தத்தின் போது ஒரு இலட்சத்துக்கு  மேற்பட்ட தமிழ் மக்களின் இனப் படுகொலையை நேரடியாக வழிநடத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டு பலமாக சுமத் தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இலங்கை அரசு இவருக்கு பதவி உயர்வு வழங்கி, பிரேசில் நாட்டி ற்கான தூதுவராக நியமித்திருந்ததுடன், கொலம்பியா, பெரு, ஆர்ஜென்டீனா, சிலி, உட்பட ஐந்து நாடுகளில் அவருக்கான இராஜ தந்திர பாதுகாப்பும் (Diplomatic Immunity) வழங்கப்பட்டிருந்தது.

இவர் படைகளுக்கு தலைமை தாங்கிய காலப்பகுதியில் சித்திரவதைக்கு உள்ளான 14 பேர் வழங்கிய சாட்சிகள் அடிப்படையில், International Truth and Justice Project (ITJP) என்ற அமைப்பு, தென் அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்பு ஒன்றின் ஊடாக, பிரேசில் நாட்டில் இந்த வழக்கை கடந்த வாரம் தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வழக்கு தாக்கல் செய்ததனை அறிந்த, பிரேசில் நாட்டுக்கான தூதுவர் ஜெகத் ஜெயசூரிய உடனடியாக அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார்.

இராணுவ தளபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட விடயத்தினை உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காக குறித்த வழக்கில் ஆஜரான சட்டத்தரணிகள் உள் ளிட்ட மனித உரிமை அமைப்புக்களின் பிரதி நிதிகள் நேற்றையதினம் மாலை லண்டனில் உள்ள கார்டன் நீதிமன்ற அறையில்  மனித உரிமை சட்டத்தரணியாகிய கீத் குல சேகரத்தின் ஒழுங்கமைப்பில் ஊடகவிய லாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தனர். அதிலேயே மேற்குறித்த விடயத்தை அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஊடகவியலாளர் மாநாட் டில், இந்த வழக்கில் ஆஜரான, சட்டத்தரணி  சார்ள்ஸ் கஸ்ரெசன் பெர்னாண்டஸ்  கருத்து தெரிவிக்கையில், “இது ஒரு மறைக்கப்பட்ட இனப்படுகொலை\” எனவும் இந்த வழக்கு ஒரு ஆரம்பம் மட்டுமே எனவும் தெரிவித்தார்.

ஐ.நா முன்னாள் நிபுணரும்,uman Rights Foundation – South Africa வின் இயக்குநருமான ஜஸ்மின் சூகா கருத்து தெரிவிக்கையில்,

இது இலங்கை அரசுக்கு எதிரான சட்ட நடவடிக்கையில் ஒரு மிக முக்கியமானபடி. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இவ்வழக்கு நம்பிக்கை வழங்கும். ஜெகத் ஜெயசூரிய தலைமறைவாகியதன் மூலம் தான் ஒரு குற்றவாளி என்பதை மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

அவர் குற்றவாளி இல்லையெனில் துணிந்து நின்று வழக்கை எதிர்கொண்டிருப்பார் அத்துடன் இதுபோன்ற வழக்குகள் சிலி, பெரு மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளிலும் தொடரும் என தெரிவித்தார்
மனித உரிமை சட்டத்தரணியாகிய கீத் குலசேகரம் கருத்து தெரிவிக்கையில், இது போல நாம் முன்னர் இராணுவத் தளபதி சுசன மென்டிஸ் சுவிஸ் வந்த போது எடுத்த முயற்சியை பிரித்தானிய தமிழர் பேரவை டீவுகு தலையிட்டு முறியடித்திருந்தது.

இதனால் இம்முறை நாம் மிகவும் இரகசியமாகவே செயற்பட வேண்டி ஏற்பட்டது. எனினும் எப்படியோ தகவல் அறிந்த அவர் தப்பித்து விட்டார்.

ஆனாலும் இந்த வழக்கு தொடரப் பட்டு அவர் மீது பிடியாணை பிறப்பிப்பதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்வோம் என மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சனல் 4 ஊடகம் தயாரித்த போர்க் குற்றத்துடன் தொடர்புடைய ஜெகத் ஜெயசூரிய பற்றிய ஆவணப்படம் திரையிடப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here