யாழ்.ஊர்காவற்றுறை, மண்டைதீவு சிறுத்தீவு கடலில் படகு கவிழ்ந்ததில் உயி ரிழந்த 6 மாணவர்களின் சடலங்களும் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் உடற் கூருகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பட்டுள்ளன. யாழ். போதனா அவைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில்
குறித்த ஆறு மாணவர்களும் நீரில் மூழ்கியதனாலேயே உயிரிழந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந் நிலையில் உயிரிழப்பதற்கு முன் மாணவர்கள் மது அல்லது வேறு ஏதாவது அருந்தியுள்ளார்களா? என அறிந்து கொள்ள மாணவர்களின் உடல் கூறுகள் எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணை தகவல்கள் ஊடாக அறிய முடிகின்றது.
யாழ். ஊர்காவற்றுரை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மண்டை தீவு – சிறு தீவு கடற்பகுதியில் தெப்பம் ஒன்று கவிழ்ந்ததில் 6 உயர்தர வகுப்பு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று முன் தினம் பிற்பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றது. எழுவ தீவு படகு தரிப்பிடத்தில் இருந்து மண்டை தீவு – சிறு தீவு கடற்பகுதிக்கு சென்று அங்கு தெப்பம் செலுத்திக் கொண்டிருக்கும் போது தெப்பம் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உரும்பிராயைச் சேர்ந்த சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களான ஜெயசாந்தன் தினேஷ் (வயது 17), நத்தன் ரஜீவன் ( வயது 18), நாகலேசன் சின்னத்தம்பி ( வயது 17), யாழ் மத்திய கல்லூரி மாணவர்களான தனுசன் ( வயது 18), சண்டிலிப்பாயைச் சேர்ந்த தனுதரன் ( வயது 20), கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவனான நல்லூர் உரும்பிராயைச் சேர்ந்த பிரவீன் (வயது 20) ஆகியோர் உயிரிழந்திருந்தனர்..
உரும்பிராயைச் சேர்ந்த ஜெயசாந்தன் தினேஷ் எனும் மாணவன் பிறந்த நாளைக் கொன்டாடியுள்ளான். பிறந்த நாள் தொடர்பில் அம்மாணவன் தனது நண்பர்களுக்கு விருந்து ஒன்றினை அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். அதன்படி யாழி. 7 மாணவர்கள் ஒன்ரு கூடி, பின்னர் கடலில் தெப்பம் ஒன்றுல் செல்வது என முடிவு செய்து ஊர்காவற்றுரை பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மண்டை தீவு – சிறு தீவு கடலில் தெப்பம் செலுத்துவது என முடிவு செய்துள்ள அவர்கள், எழுவ தீவு படகு தரிப்பிடத்தில் இருந்து தெப்பம் ஒன்றில் சென்றுள்ளனர்.
கரையில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் தெப்பம் பயணித்த வேளை தெப்பமானது கவிழ்ந்துள்ளது. இதன் போது படகில் இருந்த எழுவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதன் போது ஒரு மாணவன் சுதாகரித்துக் கொண்டு நீந்தி கரையை அடைந்து, அங்கிருந்த கடற்படையினருக்கு விடயத்தை அறிவிக்கவே கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு கடலில் தேடுதல்களை நடாத்தியுள்ளனர்.
இதன் போது உடனடியாக ஐவரின் சடலங்களை கடற்படையினர் உடனடியாகவே மீட்ட நிலையில் பிறந்த நாளைக் கொண்டாடிய மாணவனின் சடலமானது சுமார் இரண்டரை மணி நேர தேடுதல்களின் பின்னர் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி உயிரிழப்பு தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய மாணவர்கள் நீரில் மூழ்கியமையினாலேயே உயிரிழந்துள்ளார்கள் என்பது சட்ட வைத்திய அதிகாரியினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த மாணவர்களின் உடல்கூற்று மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவர்கள் இறப்பதற்கு முன்னர் ஏதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை அறிந்து கொள்வதற்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே அவர்கள் ஏதாவது அருந்தியுள்ளார்களா? என்பதை உறுதியாக வெளிப்படுத்த முடியும் என கூறினார்.