பிரான்சில் இடம்பெற்ற கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்கநிகழ்வு!

0
279

தமிழீழ விடுதலைப் பயணத்திற்கு பெரும் பங்காற்றி நின்ற தளபதிகளில் ஒருவரான கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு லாச்சப்பல் சோதியா கலைக் கல்லூரியில் நேற்று (27.08.2017) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 02.11.2007 அன்று கிளிநொச்சியில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் ஏற்றிவைக்க, மலர்வணக்கத்தை 26.06.1989 அன்று ஓமந்தையில் இந்திய இராணுவத்துடனான மோதலில் வீரச்சாவடைந்த கப்டன் ரூபன் அவர்களின் சகோதரி செய்துவைத்தார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு.சத்தியதாசன், பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் துணைவியார் ஆகியோர் கேணல் ராயு தொடர்பான நினைவுரைகளை ஆற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில், மாவீரர் நாள் 2017 இற்கான பங்களிப்பு அட்டையும் வெளியிட்டுவைக்கப்பட்டது.
பங்களிப்பு அட்டையின் முதல் பிரதியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரெஞ்சுக்கிளைப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள் வெளியிட்டுவைக்க மாவீரர் கப்டன் ரூபன் அவர்களின் சகோதரி பெற்றுக்கொண்டார்.
நிறைவாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் தாரகமந்திரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here