சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாண சபையின் சபா மண்டபத்தில் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடமாகாண சபையின் 103 ஆவது அமர்வு நேற்று வட மாகாண சபை யின் பேரவை செயலகத்தில் மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.
குறித்த அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக குறித்த கவனயீர்ப்புப் போராட்டத்தினை அவைத்தலைவர் அனுமதியுடன் மேற்கொண்டிருந்தார்.
குறித்த கவனயீர்ப்பின் போது ஜனாதிபதி அவர்களே பயங்கரவாத தடைச் சட்டத்தில் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்குங்கள், அரசே அரசியல் கைதிகளை விடுதலைசெய், அரசே பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துசெய், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு ஆயுள் தண்டனையா? சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளை வைத்துக்கொண்டு தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்த முடியுமா? சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறிதியின் படி பயங்கர வாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய். அரசியல் கைதிகளின் துன்பத்திற்கு முடிவே இல்லையா? ஜே.வி.பி அமைப்பில் இருந்தவர்களுக்கு 1971,1989 ஆண்டுகளில் பொது மன்னிப்பு தமிழ் கைதிகளுக்கு இல்லையா போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறு 5 நிமிடங்கள் மாகாண சபை உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த போராட்டத்தின் போது வடமாகாண முதலமைச்சர் உட்பட வட மாகாணசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று கவனயீர்ப்பை மேற்கொண்டிருந்தனர். இதேவேளை இரண்டு பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Home
ஈழச்செய்திகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடக்கு மாகாண சபையில் கவனயீர்ப்பு!