சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்குச் சென்ற தனியார் நிதி நிறுவன ஊழி யர்கள் பெரும் அட்டகாசத்தில் ஈடு பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு 8.30 மணியள வில் தமது நிதி நிறுவனத்தில் கடன் பெற்று ஒரு தவணைக் கடனை உரிய நேரத்தில் செலுத்தாதவர் வீட்டிற்குள் நுழைந்தே அடாவடி யில் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனி யார் நிறுவனமொன்றில் சாவகச் சேரி கெருடாவில் கிராம்புவில் பகு தியில் வசிக்கும் பெண்ணொருவர் கடனடிப்படையில் ஒரு லட்சம் ரூபாவை பெற்றுள்ளார். அதற்காக ஒவ்வொரு வாரமும் 2000 ரூபாவினை கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்.
இந்நிலையில் வியாழக்கிழமை குறித்த வங்கியிடம் கடன் பெற்றவர் வாராந்த பணத்தினை செலுத்த முடியாத சூழ்நிலையில் அடுத்த தினம் செலுத்துவதாக கூறியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொள்ளாத நிதி நிறுவன ஊழியர்கள் இருவர் குறித்த பெண்ணின் வீட்டிற்கு வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு சென்று தகாத வார்த்தை பிரயோகத்தில் ஈடுபட்டு அட்டகாசம் செய்துள்ளனர்.
இதன்போது கடன் பெற்ற பெண்ணின் கணவர் மேசன் தொழிலாளி என்பதால் அவர் குறித்த நேரத்தில் அங்கு இருக்க வில்லை. பெண்கள் மட்டும் தனியாக இருக்கும் நேரத்திலேயே மேற்படி நிதி நிறுவன ஊழியர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
மாலை 5.30 பிற்பாடு நிதி நிறுவன ஊழி யர்கள் கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு செல்ல முடியாது என்று வடக்கு மாகாண சபை சட்டம் அமுல்படுத்திய பின் இந்த சம்ப வம் இடம்பெற்றுள்ளது பலரது விசனத்துக் கும் உள்ளாகியுள்ளது.