பிரான்சில் விடுதலைச்சுடரானது 16.02.2015 மதியம் 12.00 மணிக்குலெப். கேணல். நாதன்,கப்டன் கஜன்,கேணல் பரிதி ஆகியோரின் துயிலும் இல்லத்தில் சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, பின்னர் வீதி வழியாக லாக்கூர்னோவ் நகரில் அமைந்துள்ள பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களுடைய திருவுருவச்சிலை அமைக்கப்பட்ட இடத்திற்கு சென்றிருந்தது.
பிற்பகல் 3.30 மணிக்கு லாக்கூர்னோவ் மாநகர முதல்வர் மற்றும் மாநகரசபை முக்கியஸ்த ர்கள் விடுதலைச்சுடரினை கையேற்றிருந்தனர்.
பிரிகேடியர் சு.ப . தமிழ்ச்செல்வன் அவர்களின் திருவுருவச்சிலைக்கு சுடர் வணக்கம் , மலர் வணக்கம் செய்யப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்கத்தலைவி மாநகர முதல்வரிடம் தமிழ் மக்களின் சர்வதேசதிடம்கேட்டுக்கொள்ளும் மகஜரினை கையளித்திருந்தார். அதனை வாசித்த முதல்வர் தொடர்ந்து தமிழ்மக்களுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து தாங்களும் குரல் கொடுப்போம் என்றும், தமிழ் மக்களும் சோர்வடையாது தொடர்ந்து சனநாயகவழியிலான போராட்டத்தைத் தொடர வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
மாநகரசபை ஆலோசகரும் தமிழ் மக்களின் உற்ற நண்பருமாகிய திரு. அன்ரனி றூசெல் எதிர்வரும் மார்ச் 16ம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள தமிழ்மக்களின் நீதிக்கான பேரணியில் பிரெஞ்சுக்குடிமக்களாகிய தாம் 40க்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளவுள்ளதையும் தெரிவித்திருந்தார்.