முடிவு தொடர்பான சர்ச்சைக்குரிய கோட்பாடுகளில் ஒன்று உலகமானது இந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இடம்பெறும் சூரிய கிரகணத்தின் போது அழிவடையலாம் எனக் கூறுகிறது.
நிபிறு என்ற மர்மமான இராட்சத கோள் ஒன்று பூமியின் மீது மோதவுள்ளதாக கிறிஸ்தவ எண்கணித சாத்திரவியலாளரான டேவிட் மியட் மீண்டும் எச்சரித்துள்ளார்.
அவர் வேதாகமத்தில் கூறப்பட்ட பல வாசகங்களின் அடிப்படையிலேயே இந்தக் கோட்பாட்டைத் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் 21 ஆம் திகதி அமெரிக்கப் பிராந்தியத்தில் பாரிய சூரிய கிரகணம் இடம்பெறும் போது உலகம் அழிவடையலாம் என அவர் கூறுகிறார்.
எனினும் மேற்படி சர்ச்சைக்குரிய கோட்பாடு தொடர்பில் விஞ்ஞானிகள் ஒருபோதும் எதிர்வுகூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோள் எக்ஸ் எனக் குறிப்பிடப்படும் நிபிறு கோளால் ஏற்படக்கூடிய உலக அழிவு குறித்து 2003 ஆம் ஆண்டிலிருந்து பல தடவைகள் எதிர்வுகூறப்பட்டிருந்தது.
அந்த இரகசிய கோள் தொடர்பிலும் அந்தக் கோளால் உலகிற்கு ஏற்படக் கூடிய ஆபத்து குறித்தும் அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கூறுகையில், அவை அனைத்தும் இணையத்தளப் புரளிகள் எனத் தெரிவித்துள்ளது.