இங்குள்ள மக்களை தமது சுய உரிமையுடன் வாழ விடுங்கள். இவர்கள் அனுபவித்த துன்பங்கள் போதும் இவர்களுக்காக நான் சாவதற்கும் பயப்படமாடேன் என மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்தார்.
எங்கே கிழக்கு மாகாணத்தில் இந்த அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ? எங்கே ஐக்கிய தேசிய கட் சி ?, சுதந்திரக் கட் சி அமைப்பு எங்கே ?, அரசியல்வாதிகள் எங்கே ஏன் இந்த அப்பாவி மக்களின் பிரச்சினையை தீர்க்க முன் வரவில்லையெனவும் கேள்வியெழுப்பினார்.
மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது விசேடமாக மட்டக்களப்பில் இடம்பெறும் காணி அபகரிப்பு அதிலும் இன்று அனைவராலும் பேசப்படும் வாழைச்சேனை முறாவோடை பிரதேசத்தில் வாழும் அப்பாவி தமிழ் மக்களின் சொந்தக்காணிப் பத்திரமுள்ள காணிகளை சூறையாடுவதும் பாடசாலை மைதானத்தில் அத்துமீறிய குடியேற்ற சம்பவத்தையும் கண்டித்தே நாம் இங்கு கூடியுள்ளோம்.
இந்த விடயத்தை நான் எனது கையில் எடுத்ததும் பாரிய மிரட்டல்களுக்கு தற்போது முகம் கொடுத்து வருகின்றேன் இன்று நாங்கள் கலவரத்தை உண்டு பண்ணுவதற்கு செல்லவில்லை. இவ்வளவு காலமும் எமது உண்மையான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத பட்ஷத்தில் நாங்கள் அந்த இடத்துக்கு செல்கின்றோம்.
இது மக்களுடைய பிரச்சினை என்பதால்தான் நாங்கள் அங்கு செல்கின்றோம் என்பதை இந்த இடத்தில் உள்ள ஊடகங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன் .
சிறுவர்கள் கல்வி கற்கும் இடம் தங்களது திறமைகளை வெளிக்கொண்டுவரும் மைதானத்துக்கு நடுவில் கொண்டு வீடு காட்டியுள்ளனர் . இந்த மைதானத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வீட் டை உடனடியாக அகற்றவேண்டும் என்று இங்குள்ள தாய்மார்கள் தந்தைமார்கள் சிறுவர்கள் என வீதியோரத்துக்கு வந்து கூறினோம் எமது பாடசாலையும் எமது காணிகளையும் மீட்டுத்தாருங்கள் என்று கூறினோம்.
இந்த நாட் டை ஆளும் அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளினதும் அசமந்தப் போக்கே இன்று நாம் இங்கு வருவதற்கான காரணம். ஒரு மாத்தில் 3 தடவை அரசாங்க அதிபரை சந்தித்துள்ளனர் . 3 தடவை காணி ஆணையாளரை சந்தித்துள்ளோம். 4 தடவைகள் பிரதேச செயலாளரை சந்தித்துள்ளோம். 5 தடவை கிராமசேவகரை சந்தித்துள்ளோம். நான்கு தடவை மட்டக்களப்பு உயர் பொலிஸ் அதிகாரி யாகொட ஆராச்சியை சந்தித்துளோம். இவர்கள் எல்லோரும் இந்த பாவப்பட் ட தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் .
இன்று நான் பயமில்லாமல் விகாராதிபதி என்ற அடிப்படையில் கூறுகின்றேன் கடந்த சில நாட்களுக்கு முன் அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் இந்த அப்பாவி மக்களின் உண்மை நிலையை அறிந்த பொலிஸ் உயர்அதிகாரி உடனடியாக காவலரணை அமைப்பதாக உறுதியளித்து இன்று ஒரு மாதம் முடிந்து விட்டது எங்கே காவலரண் இந்த அப்பாவி தமிழ் மக்களை பொலிஸ் உயர் அதிகாரி ஏமாற்றியுள்ளார் .
இதன் பிரதிபலனாக காணி அபகரப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் அவர்களது அபகரிப்பு வேலையை தொடர்ந்து நடத்திக்கொண்டு இருக்கின்றனர் . அப்பாவி தமிழ் மக்கள் வீதியில் இருக்கின்றனர் .
அப்படி என்றால் எங்கே கிழக்கு மாகாணத்தில் இந்த அப்பாவி மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ? எங்கே ஐக்கிய தேசிய கட் சி ? சுத்தந்திர கட் சி அமைப்பு எங்கே ?அரசியல் வாதிகள் எங்கே ஏன் இந்த அப்பாவி மக்களின் பிரச்சினையை தீர்க்க முன் வரவில்லை.
இந்த மக்கள் முப்பது வருடம் யுத்தத்தில் பாரிய இன்னல்களை அனுபவித்தவர்கள். இவர்களை தங்களது சுய உரிமையுடன் வாழ விடுங்கள் இவர்கள் அனுபவித்த துன்பங்கள் போதும் இவர்களுக்காக நான் சாவதற்கும் பயப்படமாடேன் என தெரிவித்தார்.