
வடக்கு எகிப்தில் இரு பயணிகள் தொடருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் சுமார் 36 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குறித்த தொடருந்து விபத்தில் 100 க்கும் அதிகமானோர் காமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு தொடருந்து கெய்ரோவில் இருந்தும் மற்றைய தொடருந்து போர்ட்டிலிருந்தும் பயணித்த நிலையில், வடக்கு எகிப்தின் கரையோர நகரான அலெக்ஸான்ரியாவில் வைத்து குறித்த இரு தொடருந்துகளும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன.