பிரான்சில் இடம்பெற்ற மூதூர் படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

0
267

சிறீலங்கா படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 11 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நேற்று (04.08.2017) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, பிரான்சு கிளிச்சி பிராங்கோ தமிழ்சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிச்சிப்பகுதியில் குறித்த பணியாளர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பொதுச்சுடரை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர் திரு.குமணன் அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரை பட்டினிக்கு எதிரான அமைப்பின் மூதூரில் குறித்த 17 பணியாளர்களுடன் பணியாற்றிய முன்னாள் பணியாளர் திரு.ஜெயகாந் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மலர்வணக்கத்தை Mairie de Clichy உதவி நகர பிதா Mme Viviane DIECO அவர்கள் செலுத்தினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்தகொண்ட அனைவரும் மலர்வணக்கம் செலுத்தினர்.  
தொடர்ந்து குறித்த 17 பணியாளர்கள் தொடர்பான நினைவுரைகள் இடம்பெற்றன. நினைவுரைகளை செல்வன் மீராஜ், திரு.ஜெயகாந் (முன்னாள் பணியாளர் ACF  MOOTHUR) மற்றும் ACF France இல் பணியாற்றும் உத்தியோக பூர்வ வழக்குரைஞர் ஒருவர், Mme Viviane DIECO (Mairie de Clichy), கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க செயலாளர் திரு. சச்சி கந்தையா, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு. பாலசுந்தரம் ஆகியோர் ஆற்றியிருந்தனர்.
இவர்களுடன் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு தமது நினைவு வணக்கத்தைச் செலுத்தியிருந்தனர்.
(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here