பாட­சாலை காணியை அதி­ர­டிப்­படையினர் சுவீ­க­ரித்­துள்­ள­மையால் மாண­வர்கள் பாதிப்பு: சிவ­சக்தி ஆனந்தன்

0
250

siva mpவவு­னியா, பூவ­ர­சங்­குளம் ஆரம்பப் பாட­சாலை காணியை அதி­ர­டிப்­படையினர் சுவீ­க­ரித்­துள்­ள­மையால் மாண­வர்கள் பாதிப்­ப­டைந்­துள்­ள­தாக வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் தெரி­வித்தார்.

இது குறித்து அவர் ஊட­கங்­க­ளுக்கு தெரி­வித்­துள்­ள­தா­வது,

யுத்தம் நடை­பெற்று முடிந்­ததன் பின்னர் அதா­வது 2010ஆம் ஆண்டில் வவு­னியா பூவ­ர­சங்­குளம் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள பூவ­ரசு ஆரம்பப் பாட­சா­லையில் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் முகா­மிட்டு பாட­சா­லையின் கற்றல் கற்­பித்தல் நட­வ­டிக்­கைக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்திவரு­வ­துடன் பாட­சா­லையின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கும் தடையாக உள்­ளனர்.

கொழும்பில் உள்ள உயர் பாது­காப்பு வல­யங்­களில் உள்ள தனியார் காணி­களில் உள்ள பாது­காப்புத் தரப்­பினர் அப்­பு­றப்­படுத்­தப்­பட்டு அந்­தக்­கா­ணி­களை உரி­ய­வர்­க­ளிடம் கொடுப்­ப­தற்கு புதிய அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. ஆனால், யுத்­தத்­தினால் உண்­மையில் பாதிக்­கப்­பட்ட பிர­தேச மக்­களின் வாழ்­வி­ய­லோடு ஒன்­றிய பாட­சா­லை­யி­லி­ருந்து விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரை வெளி­யேற்­று­வ­தற்கு இன்­னமும் அர­சாங்­கத்­திற்கு மனம் வரா­ம­லி­ருப்­பது கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது.

முந்­தைய அர­சாங்கம் காது கொடுத்துக் கேளா­தி­ருந்த எமது கோரிக்­கை­களை புதிய அர­சாங்கம் செவி­ம­டுக்கும் என்ற எதிர்­பார்ப்பில் இந்த வேண்­டு­கோளை விடுப்­ப­தாக தெரி­வித்தார்.

மேலும், இது தொடர்­பாக காவல்­துறை, அனர்த்த முகா­மைத்­துவம் மற்றும் கிறிஸ்­தவ விவ­கார அமைச்­ச­ருக்கும் பாது­காப்புச் செய­லா­ள­ருக்கும் கடிதம் எழு­தி­யி­ருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார்.

வவு­னியா தெற்கு கல்வி வல­யத்தில் அமைந்­துள்ள பூவ­ர­சங்­கு­ளத்­தி­லுள்ள பூவ­ரசு ஆரம்பப் பாட­சா­லையில் 2010 ஆம் ஆண்­டி­லி­ருந்து விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் முகா­மிட்­டுள்­ளனர். இரண்டு ஏக்கர் விஸ்­தீ­ர­ண­முள்ள மேற்­படி பாட­சா­லைக்­காணி, கட்­டடம், கிணறு, மல­ச­ல­கூடம் என்­ப­வற்­றையும் இவர்­களே தமது பயன்­பாட்டில் வைத்­துள்­ளனர்.

125க்கும் மேற்­பட்ட மாண­வர்­களைக் கொண்ட மேற்­படி ஆரம்பப் பாட­சாலை தற்­போது அரு­கி­லுள்ள பூவ­ர­சங்­குளம் மகா வித்­தி­யா­லய கட்­ட­டத்தில் தற்­கா­லி­க­மாக இயங்கிவரு­கின்­றது. இதனால்,ஆரம்ப பாட­சா­லையின் கல்வி அபி­வி­ருத்தி, வள அபி­வி­ருத்தி உட்­பட பல்­வேறு விட­யங்­களை செயல்­ப­டுத்­து­வதில் முட்­டுக்­கட்டை நிலை ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த வரு­டத்தில் இப்­பா­ட­சா­லைக்­கென ‘Room to Read’ நிறு­வ­னத்தால் ஒதுக்­கீடு செய்­யப்­பட்ட நிதி­யா­னது பாட­சாலைச் சமூ­கத்தின் பொறுப்பில் பாட­சாலைக்­கான காணியும் நிரந்­தரக் கட்­ட­டமும் இல்­லா­மையால் மீளப்­பெ­றப்­பட்­டுள்­ளது. இவ்­வாண்டு UNICEF, Educational Ministry என்­ப­வற்றால் இரு கட்­ட­டங்கள் ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளன. பாட­சாலைச் சூழ­லி­லி­ருந்து அதி­ர­டிப்­ப­டை­யினர் விரைவில் வெளி­யேற்­றப்­படாவிட்டால் மீண்டும் இவ்­விரு கட்­ட­டங்­களும் கட்ட முடி­யாத நிலை ஏற்­ப­டக்­கூடும் என மேற்­படி பாட­சாலைச் சமூகம் அச்சம் கொண்­டுள்­ளது.

இப்­பா­ட­சாலை காணி­யி­லி­ருந்து அதி­ர­டிப்­ப­டை­யி­னரை வெளி­யே­று­மாறு 2013 நவம்பர் மாதத்தில் நடந்த வடக்கு மாகாண சபையின் முத­லா­வது அமர்வில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. வவு­னியா மாவட்ட அர­சாங்க அதி­பரும் 2014 ஆம் ஆண்டின் இறு­தியில் இரண்டு தடவை இரா­ணு­வத்தை காணி­யி­லி­ருந்து வெளி­யே­று­மாறு பணித்­தி­ருந்தார். வவு­னியா மாவட்ட அபி­வி­ருத்­திக்­ கு­ழுக்­ கூட்­டத்­திலும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வாறு பல்­வேறு கோரிக்­கைகள் உத்­த­ர­வுகள் விடுக்­கப்­பட்ட போதிலும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் காணி­யி­லி­ருந்து இது­வரை வெளி­யே­ற­வில்லை. தற்­போ­தைய புதிய அர­சாங்கம் தனியார் காணி­க­ளி­லி­ருந்து இரா­ணு­வத்தை வெளி­யேற்­று­வ­தாகக் கூறு­கின்ற நிலையில் பாட­சா­லைக்­காணி, கட்­ட­டத்­தி­லி­ருந்து விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் வெளி­யேற மறுப்­பது கண்­ட­னத்­திற்­கு­ரி­யது.

எனவே உடனடியாக விசேட அதிரடிப் படையினரை வெளியேற்றி வந்த நிதி திரும்பிப்போகாமல் நிரந்தரக்கட்டடம் அமைக்க வழிவகுப்பதுடன் பின்தங்கிய கிராமப்புறச் சிறார்களின் கல்வி வளர்ச்சிக் கும் உதவுமாறு பாடசாலைச் சமூகம் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் பிள்ளைகள் தமது கற்றல் நடவடிக்கைகளை தமது சொந்தப் பாடசாலையில் தடையின்றி மேற்கொள்ள புதிய அரசு காலதாமதமின்றி உடன் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்வதாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி. தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here