வித்தியா கொலை வழக்கில் ஓகஸ்ட் 4ஆம் நாள் மிக முக்கிய திருப்பம்!

0
182

வித்தியா கொலை வழக்கில் ஓகஸ்ட் 4ஆம் நாள் மிக முக்கிய திருப்பம்
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் நாள் நடைபெறவுள்ள தீர்ப்பாயத்தின் அமர்வில் அளிக்கப்படவுள்ளது.

வித்தியா கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள – மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் தலைமையிலான மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயத்தின் முன் நடைபெற்று வருகிறது.

 

இந்த வழக்கின் மூன்றாவது கட்ட சாட்சியப் பதிவுகள் அடுத்த மாதம் 4ஆம் நாள் இடம்பெறவுள்ளது. அன்றைய நாள், இந்த வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் அளிக்கப்படும்.

கொலையுண்ட மாணவி மற்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்கள் தொடர்பான மரபணுப் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்த, மரபணுத் தடயவியல் நிறுவனத்தின் தலைவர் சாட்சியத்தை அளிக்கவுள்ளார்.

இந்த வழக்கில் முக்கியமான ஆதாரமாக மரபணு ஆய்வு அறிக்கை அமைந்துள்ளது என்று பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த வழக்கின் தொடக்கத்தில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here