நாட்டின் 15 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி நிலைமையால் 10 ,55,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிலவும் வறட்சியுடனான வானிலையால் வடக்கு மாகாணமே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
வடக்கில் மாத்திரம் 133,482 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக இதுவரை வடமாகாணத்தின் 5 மாவட்டங்களுக்கும் 45 பவுசர்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.