ஜோர்டன் தலைநகர் அம்மானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தில் நடைபெற்ற தாக்குதலில், உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் ஒருவர் பலியாகி இருப்பதாகவும், ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு படைகள் கூறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால், இந்த தகவலை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
தூதரகத்தில் உள்ள அதிகாரிகளை இஸ்ரேலிய அதிகாரிகள் வெளியேற்றி வருவதாக நம்பப்படுகிறது.
அமானில் உள்ள ஒரு குடியிருப்பு மாவட்டமான ரபியா அண்டைப்புற பகுதியில் கடுமையாக பாதுகாக்கப்பட்ட தூதரகம் அமைந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று, முஸ்லிம்கள் மற்றும் யூதர்களுக்கு புனித தலமாக கருதப்படும் ஓர் இடத்தில் மெட்டல் டிடெக்டர்களை நிர்மாணித்ததற்காக இஸ்ரேலை எதிர்த்து ஆயிரக்கணக்கான ஜோர்டானியர்கள் அம்மானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
அந்த நகரில் உள்ள முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஜோர்டானிடம் உள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகள் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை. செய்தி வெளியீடு தொடர்பாக கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர்.
(பிபிசி)