பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கறுப்பு யூலை தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்!

0
268

பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் மாநகரில் கறுப்பு யூலை நினைவு வணக்க நிகழ்வும், தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் (23.07.2015) ஸ்ராஸ்பூர்க் மத்திய பகுதியில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ் மக்கள் 1948 இல் இருந்து இன்று வரை நடந்து கொண்டிருக்கும்  தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக விசாரணையே  நீதியை பெற்றுத்தருமென  பிரான்ஸ் அரசாங்கத்திடமும், ஐரோப்பிய ஒன்றியத்திடமும் அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும், தமிழினப்படுகொலையில் இருந்து தமிழ் மக்களை காப்பற்றகோரியும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் எல்லை கடந்த அரச பயங்கரவாத  நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ் மக்கள் தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தியிருந்தார்கள் .  நிகழ்வில் தமிழினப்படுகொலையை உலக நாடுகள் கண்டுகொள்ள வைப்பதுடன்தமிழினப் படுகொலைக்கான அனைத்துலக சுயாதீன விசாரணைக்கான அறைகூவலும் விடப்பட்டது.  இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு பிரான்ஸ் பத்திரிகையும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற கோசத்துடன் நிகழ்வு நிறைவுக்கு வந்தது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here