யாழ். மாநகர சபை கழிவுப் பொருட்களை காக்கைதீவில் கொட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றினை நேற்று மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் முறையற்ற விதத்தில் கழிவுகள் கொட்டப்படுவதனை கண்டித்தே நவாலி, அரசடி, ஆணைக்கோட்டை பகுதி மக்கள் கல்லுண்டாய் வெளிப்பகுதியில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.